இயல்புநிலைக்குத் திரும்ப 'மூன்று நிலை' திட்டம்: டிரம்ப் அறிவிப்பு

இயல்புநிலைக்குத் திரும்ப 'மூன்று நிலை' திட்டம்: டிரம்ப் அறிவிப்பு

2 mins read
44665c2d-c905-4221-922e-a69ab1e17e78
வா‌ஷிங்டன் வெள்ளை மாளிகையால் கொரோனா பணிக்குழுக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப். இடமிருப்பவர் அந்நாட்டின் ஒவ்வாமை, தொற்றுநோய்க்கழகத்தின் இயக்குநர் டாக்டர் அந்தோணி ஃபெசி. படம்: ராய்ட்டர்ஸ் -

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கப் பொரு­ளி­யலை மீண்­டும் தொடங்­கு­வ­தற்­கான மூன்று நிலை வழி­காட்­டு­தல்­களை வெளி­யிட்­டுள்ள அதன் அதி­பர் டிரம்ப், தங்­கள் மாநி­லங்­களில் முடக்க உத்­த­ர­வைத் தளர்த்­து­வது குறித்த முடிவை எடுக்­கும் பொறுப்பை அதன் ஆளு­நர்­க­ளி­டமே ஒப்­ப­டைப்­ப­தாக அறி­வித்­துள்­ளார்.

அமெ­ரிக்­கா­வில் கொரோனா நோய்த்­தொற்­றால் இது­வரை 6,77,570 பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர், பலி எண்­ணிக்கை 35 ஆயி­ரத்தை நெருங்­கு­கிறது.

நோய்த்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­யாக விதிக்­கப்­பட்­டி­ருந்த ஊர­டங்­கால் அமெ­ரிக்­கா­வின் பொரு­ளா­தா­ர­மும் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், வெள்ளை மாளி­கை­யில் நடை­பெற்ற கொரோனா தடுப்­புப் பணிக்­குழு கூட்­டத்­தில், நம்­மு­டைய அடுத்த போர் அமெ­ரிக்­கா­வை மீண்­டும் பொரு­ளா­தா­ரப் பாதைக்கு கொண்டு செல்­வ­து­தான் என்­றார் டிரம்ப்.

அப்­போது அமெ­ரிக்க பொரு­ளா­தா­ரத்தை மீண்­டும் இயல்பு பாதைக்குக் கொண்­டு­வ­ரு­வ­தற்­கான 3 நிலை வழி­காட்­டு­தல்­களை அவர் வெளி­யிட்­டார்.

அதில் முதல் நிலை­யாக ஊர­டங்கு நட­வ­டிக்­கை­யில் இருக்­கும் மாநில மக்­கள் அத்­தி­யா­வ­சி­ய­மற்ற பய­ணங்­க­ளைத் தவிர்க்க வேண்­டும், கூட்­டம் கூட்­ட­மாகக் கூடு­வதைத் தவிர்க்க வேண்­டும். உண­வ­கங்­கள், வழி­பாட்டுத் தலங்­கள், விளை­யாட்டு அரங்­கம் ஆகி­ய­வற்­றில் க­டும் கட்­டுப்­பா­டு­க­ளு­டன், சமூக இடை­வெ­ளியை கடை­ப் பி­டிக்க வேண்­டும்.

இரண்­டா­வது நிலை­யில், நோய்த்­தொற்று மீண்­டும் பர­வாது என நம்பப்படும் இடங்­களில் மக்­கள் தங்­க­ளின் அத்­தி­யா­வ­சி­ய­மற்ற பய­ணத்தை மீண்­டும் தொடங்­க­லாம். 50 அல்­லது அதற்கு மேற்­பட்­ட­வர்­கள் கூடிய பொதுக் கூட்­டங்­களை தவிர்க்க வேண்­டும், பள்­ளி­கள் மற்­றும் பகல்­நேர மது­பானக் கூடங் களை மீண்­டும் இயக்­க­லாம்.

மூன்­றா­வது நிலை­யில், நோய்த்­தொற்று பர­வு­வது குறைந்து வரு­வது, அதன் வளை­கோடு சம­மா­ன­தாக தெரிந்­தால், மக்­கள் சக மக்­க­ளோடு பேசு­வ­தற்­கும், பழ­கு­வ­தற்­கும் பொது இடங்­களில் அனு­ம­திக்­க­லாம். ஆனால் சமூக இடை­வெளி அவ­சி­யம். பணி­யி­டங்­களில் சமூக இடை­வெ­ளியை கடை­ப்பி­டிக்­க­லாம் ஆனால் கட்­டுப்­பாடு இருக்­காது, மருத்­து­வ­ம­னை­கள், பாது­காப்பு இல்­லங்­கள் தடை­யின்றி இயங்­க­லாம், மது­பான விடு­தி­களில் செயல்­பா­டு­களை அதி­க­ரிக்­க­லாம்.

ஒவ்­வோர் மாநி­லத்­தி­லும் முடக்க உத்­த­ர­வைத் தளர்த்­து­வது என்­பது மிக­வும் கவ­ன­மா­கச் செய்ய வேண்­டிய நட­வ­டிக்கை. மாநில ஆளு­நர்­கள் இதில் வேக­மாக முடி­வெ­டுக்க வேண்­டும் என்று டிரம்ப் கேட்டுக் கொண்டார்.

மேலும் நியூ­யார்க்­கில் மே மாதம் 15 ஆம் தேதி­ வரை முடக்க நிலை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் கியோமோ அறிவித்ததையடுத்து நியூ­ஜெர்சி மாநில ஆளு­ந­ரும் அதே அறி­விப்­பை­ அறி­வித்­துள்­ளார்.