வாஷிங்டன்: உலக சுகாதார அமைப்பு மீதான அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் குற்றச்சாட்டிற்கு குடியரசுக் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கொவிட்-19 கிருமித் தொற்று தொடர்பில் சீனா குறித்த தகவல்களை உலக சுகாதார அமைப்பு மறைத்ததாகக் கடுமையாகக் குற்றம்சாட்டிய டிரம்ப் அமைப்புக்கான நிதியை நிறுத்துவதாகவும் அறிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு விவகாரக் குழுவின் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 17 பேர் டிரம்பின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதியதோடு டெட்ரோஸ் பதவி விலகுவதை உறுதி செய்தால் மீண்டும் நிதிப்பங்களிப்பு செய்யலாம் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
மேலும் உலக சுகாதார அமைப்பின் மீது அனைத்துலக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இதற்கிடையே, கிருமி குறித்து உலக நாடுகளுக்குத் தெரிவிப்பதை சீனா தாமதப்படுத்தியது என்ற குற்றச்சாட்டு, திசைதிருப்பும் முயற்சி என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் சீன அதிபர் ஜி ஸின்பிங்கும் மறைமுகமாக அமெரிக்காவைச் சாடினர்.

