பிரான்சில் 19,000ஐ நெருங்கும் மரண எண்ணிக்கை

பிரான்சில் 19,000ஐ நெருங்கும் மரண எண்ணிக்கை

1 mins read
3a876a0b-6db5-4879-88a0-ff5a36733012
வெளியே செல்ல அனுமதி கிடைத்திருப்பதை உறுதி செய்யும் சீட்டை குதிரை மேல் அமர்ந்து சுற்றுக்காவலில் ஈடுபட்ட பிரெஞ்சு போலிஸ் அதிகாரியிடம் காட்டும் முதியவர். கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த பிரான்சில் முடக்கநிலை நடப்பில் உள்ளது. படம்: ஏஎஃப்பி -

பாரிஸ்: பிரான்­சில் கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக மாண்­டோர் எண்­ணிக்கை சிங்­கப்­பூர் அளவில் நேற்­றி­ரவு 7.30 மணி நில­வரப்­படி 18,681ஆக பதி­வா­னது.

இருப்­பி­னும், கிரு­மிப் பர­வல் மெது­வ­டைந்­தி­ருப்­ப­தாக அந்­நாட்­டின் சுகா­தா­ரத் துறை தெரி­வித்­தது.

பிரான்­சில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள முடக்­க­நிலை பலன் தரத் தொடங்­கி­யுள்­ள­தாக அந்­நாட்­டின் சுகா­தா­ரத் துறைத் தலை­வர் ஜெரோம் செலோ­மோன் கூறி­னார்.

மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­வோ­ரின் எண்­ணிக்கை தொடர்ந்து மூன்­றா­வது நாளாக குறைந்து வந்­துள்­ள­தாக அவர் தெரி­வித்­தார்.

தீவிர சிகிச்­சைப் பிரி­வில் சிகிச்சை பெறு­வோ­ரின் எண்­ணிக்கை தொடர்ந்து ஒன்­ப­தா­வது நாளாக குறைந்­தி­ருப்­ப­தாக திரு செலோ­மோன் தெரி­வித்­தார்.