மிலானில் கடுமையான பாதிப்பு; மீண்டு எழ முட்டுக்கட்டை

மிலானில் கடுமையான பாதிப்பு; மீண்டு எழ முட்டுக்கட்டை

1 mins read
7d6fe548-7665-4422-a8cf-6824f4fa1458
இத்­தா­லி­யில் உள்ள பிற பகு­தி­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் மிலா­னில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 30 விழுக்­காடு அதி­கம். படம்: ஏஎப்பி -

மிலான்: இத்­தா­லி­யின் மிலான் நக­ரில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் கடு­மை­யான பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது.

பொரு­ளி­யலை வலுப்­ப­டுத்த வர்த்­த­கங்­க­ளைத் தொடங்­க­­வும் பொது­மக்­கள் தங்­கள் இயல்பு வாழ்க்­கைத் திரும்ப வகை செய்­ய­வும் இத்­தா­லி­யப் பிர­த­மர் கியூ­சிப்பி கோன்ட்டே கொண்­டி­ருக்­கும் திட்­டத்­துக்கு இது முட்­டுக்­கட்­டை­யாக அமைந்­துள்­ளது.

இத்­தா­லி­யில் உள்ள பிற பகு­தி­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் மிலா­னில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 30 விழுக்­காடு அதி­கம்.

கிரு­மித்­தொற்று கார­ண­மாக மிலா­னில் பல உயி­ரி­ழப்­பு­கள் ஏற்­பட்­டுள்­ளன.

மிலா­னில் உயி­ரி­ழந்த பிற மாநி­லத்­த­வர்­க­ளுக்­கான இறு­திச் சடங்­கு­களை நிறுத்­தும் நிலை மிலா­னுக்கு இம்­மா­தம் ஏற்­பட்­டது.

பணக்­கார நக­ர­மான மிலா­னில் அண்­மைய வாரங்­களில் தாதிமை இல்­லங்­களில் உள்ள நூற்­றுக்­க­ணக்­கான நோயா­ளி­கள் மாண்­ட­னர்.

அடுத்த மாதம் 4ஆம் தேதி­யி­லி­ருந்து இத்­தா­லியை முழு முடக்­க­நி­லை­யி­லி­ருந்து பகுதி முடக்­க­நி­லைக்கு மாற்ற பிர­த­மர் கோன்ட்டே திட்­டம் கொண்­டுள்­ளார்.

ஆனால் வர்த்­த­கங்­களை வழக்­க­நி­லைக்கு மீண்­டும் கொண்டு வர தொழி­ல­தி­பர்­களும் பிற மாநில

அர­சி­யல்­வா­தி­களும் அவ­ருக்கு நெருக்­கு­தல் தந்து வரு­கி­றார்­கள்.

இருப்­பி­னும், மிலா­னில் கடு­மை­யான பாதிப்பு நிலவி வரு­வ­தைச் சுட்­டிக்­காட்டி எச்­ச­ரிக்­கை­யு­டன் இருக்க வேண்­டி­யதை வலி­யு­றுத்து­ கின்­ற­னர் மிலா­னைச் சேர்ந்த அர­சி­யல்­வா­தி­கள்.

இதற்கிடையே, இத்தாலியின் லொம்பார்டி வட்டாரத்தில் முன்கூட்டியே முடக்கநிலை அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று இத்தாலியைச் சேர்ந்த மூத்த மருத்துவ நிபுணர்கள் குறை கூறியுள்ளனர்.