பாதுகாப்பு அங்கிகளின் மறுபயனீடு - பிரிட்டிஷ் அரசாங்கத்தை குறைகூறும் நிபுணர்கள்

பாதுகாப்பு அங்கிகளின் மறுபயனீடு - பிரிட்டிஷ் அரசாங்கத்தை குறைகூறும் நிபுணர்கள்

1 mins read
063ba8d1-9d07-49bc-b6c6-dffcaaaace59
(படம்: ராய்ட்டர்ஸ்) -

பிரிட்டனில் பாதுகாப்பு உடைகளுக்குப் பற்றாக்குறையின் காரணமாக அவற்றை மறுபயனீடு செய்யலாம் எனப் பரிந்துரைத்த பிரிட்டிஷ் அரசாங்கத்தை மருத்துவர்களும் சுகாதார ஊழியர்களும் குறைகூறி வருகின்றனர். அந்நாட்டில் இதுவரை 15,000க்கும் அதிகமானோர் கொவிட்-19 கிருமித்தொற்றால் மரணமடைந்துள்ளனர். உலக நாடுகளின் கொரோனா மரண எண்ணிக்கைகளைப் பொறுத்தவரை பிரிட்டன் ஐந்தாவது நிலையில் உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மரண எண்ணிக்கை 980இலிருந்து 15, 464க்கு அதிகரித்ததாக சனிக்கிழமையில் வெளிவந்த தகவல்கள் காட்டுகின்றன. இந்நிலையில பிரிட்டனில் பாதுகாப்பு அங்கிகளுக்கான தட்டுப்பாடு நிலவுவதால் அதற்கான மாற்று உடைகளைப் பயன்படுத்தும்படி அந்நாட்டின் சுகாதார அமைச்சு அறிவுறுத்தலை வெளியிட்டது. இந்த அறிவுறுத்தல், அந்நாட்டில் சுகாதார ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினையை வெளிச்சம்போட்டுக் காட்டுவதாக பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்தின் நிபுணர்க்குழுவின் தலைவர் ரோப் ஹார்வுட் தெரிவித்தார். கருவிகளை மறுபடியும் பயன்படுத்தவேண்டும் என்பது பரிந்துரைக்கப்பட்டால் அதற்கு அறிவியல் ரீதியான காரணங்கள் வழங்கப்படவேண்டும் என்று அவர் கூறினார்.

கொரோனா கிருமித்தொற்றைக் கையாள்வதில் பிரிட்டன், மற்ற ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் பின்தங்கிவிட்டதாகக் கருதப்படுகிறது.