கடல்கடந்த சிங்கப்பூரர்களின் கனிவன்பு

1 mins read
a8dbee5e-47c3-4a44-9ed9-507f6757d79b
'எஸ்­ஜி­பெ­டுலி' என்­னும் தொண்­டூ­ழிய அமைப்பு ஜகார்த்­தா­வில் இயங்கி வரு­கிறது. இந்­தோ­னீ­சி­யா­வில் வாழும் சிங்­கப்­பூ­ரர்­களை உள்­ள­டக்­கிய அந்த அமைப்பு கிரு­மிப் பர­வ­லைத் தடுக்­கும் முயற்­சி­க­ளுக்கு கைகொ­டுத்து வரு­கிறது. படம்: ஹரப்பான் கித்தா தேசிய இதய நிலையம், ஜகார்த்தா -

ஜகார்த்தா: சிங்­கப்­பூ­ரர்­கள் கனி­வன்பு மிக்­க­வர்­கள் என்­பது கடல்­தாண்­டி­யும் நிரூ­பிக்­கப்­பட்டு உள்­ளது. இந்­தோ­னீ­சி­யா­வில் நேற்று வரை 6,575 பேருக்­குக் கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்டு உள்­ளது. மாண்­டோர் எணிண்கை 582. கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க அர­சாங்­கம் முயன்று வரும் வேளை­யில் தொண்­டூ­ழிய அமைப்­பு­களும் அதற்கு உறு­துணை புரி­கின்­றன.

அவ்­வ­கை­யில் 'எஸ்­ஜி­பெ­டுலி' என்­னும் தொண்­டூ­ழிய அமைப்பு ஜகார்த்­தா­வில் இயங்கி வரு­கிறது. இந்­தோ­னீ­சி­யா­வில் வாழும் சிங்­கப்­பூ­ரர்­களை உள்­ள­டக்­கிய அந்த அமைப்பு கிரு­மிப் பர­வ­லைத் தடுக்­கும் முயற்­சி­க­ளுக்கு கைகொ­டுத்து வரு­கிறது. ஜகார்த்­தா­வில் உள்ள ஹரப்­பான் கிட்டா தேசிய இதய நிலை­யத்­துக்கு கடந்த வாரம் இந்த அமைப்பு மூன்று பெட்­டி­களை அனுப்பி வைத்­தது. அவற்­றுள் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளுக்­கான 70 கவச உடை­கள் இருந்­தன.

சிங்­கப்­பூர் தேசிய கொடி பொறிக்­கப்­பட்ட அப்பெட்­டி­யில் 'கிரு­மிக்கு எதி­ராக ஒன்­றி­ணைந்து போரா­டு­வோம்' என்ற வாச­கம் இடம்­பெற்­றி­ருந்­தது.