பிரிட்டனில் பாதுகாப்பு உடுப்புகள் பற்றாக்குறை: அரசு மீது புகார்

பிரிட்டனில் பாதுகாப்பு உடுப்புகள் பற்றாக்குறை: அரசு மீது புகார்

2 mins read
8ebda94e-efff-4f26-a275-92f12e33edd7
பிரிட்டனில் லண்டன் நகரில் ராணுவ அதிகாரி ஒருவர் பொதுமக்களில் ஒருவரை சோதிக்கிறார். படம்: ராய்ட்டர்ஸ் -

லண்­டன்: பிரிட்­ட­னில் கொரோனா கிரு­மித்­தொற்று நோயா­ளி­க­ளுக்­குச் சிகிச்சை அளிக்­கும் ஊழி­யர்­கள் பயன்­ப­டுத்­தும் பாது­காப்பு உடுப்பு உள்­ளிட்ட சாத­னங்­களை மீண்­டும் பயன்­ப­டுத்­திக் கொள்­ள­லாம் என்று அந்த நாட்டு அர­சாங்­கம் யோசனை தெரி­வித்துள்ளது.

இதை மருத்­து­வர்­களும் சுகா­தா­ரத்­துறை ஊழி­யர்­களும் கடு­மை­யா­கக் கண்­டித்து இருக்­கி­றார்­கள். கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக பாது­காப்பு உடுப்­பு­கள் உள்­ளிட்ட மருத்­து­வச் சாத­னங்­க­ளுக்கு பிரிட்­ட­னில் பற்­றாக்­குறை ஏற்­பட்டுள்ளது.

அந்த நாட்­டில் 15,464 பேர் கொரோனா கிரு­மித்­தொற்­றுக்­குப் பலி­யா­கி­விட்­டார்­கள். இந்த நிலை­யில் அர­சாங்­கம் வெள்­ளிக்­கிழமை மருத்­து­வ­ம­னை­க­ளுக்­கு வழி­காட்டி நெறி­மு­றை­களை வெளி­யிட்­டது.

சுகா­தார பரா­ம­ரிப்பு ஊழி­யர்கள் உடல் முழு­வ­தும் மூடும்­படி அணி­யும் பாது­காப்பு உடுப்­பு­களை மீண்­டும் பயன்­ப­டுத்­திக் கொள்­ள­லாம் என்று அந்த வழி­காட்டி நெறி­முறை­கள் குறிப்­பிட்­டன.

ஆனால் உட­ன­டி­யாக மருத்­து­வர்­களும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை ஊழி­யர்­களும் அந்த நெறி­மு­றை­களை ஏற்க மறுத்­து­விட்­டார்­கள். அர­சாங்­கம் போதிய அள­வுக்கு பாது­காப்­புச் சாத­னங்­க­ளுக்கு ஏற்­பா­டு­களைச் செய்­ய­வில்லை என்­பதையே இது காட்­டு­கிறது என்று பல­ரும் கூறி­னார்­கள்.

பற்­றாக்­குறை நேரத்­தில், கூடு­மா­ன­வரை ஆபத்­து­க­ளைக் குறைத்­துக்­கொள்ள என்ன செய்ய வேண்­டும் என்­ப­தெல்­லாம் மருத்­து­வர்­க­ளுக்­குத் தெரிந்து இருக்­கிறது என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வதே அர­சாங்­கம் வெளி­யிட்டு உள்ள வழி­காட்டி நெறி­மு­றை­க­ளின் நோக்­கம் என்று சுகா­தார அமைச்­சின் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

இதனிடையே, புதிதாக 55,000 உடுப்­பு­கள் விரை­வில் வந்து சேரும் என்று சுகா­தார அமைச்­சர் மார்ட் ஹான்­கூக் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் குழு ஒன்­றி­டம் தெரி­வித்­தார்.

பாதிப்பு ஏற்­ப­டு­வ­தைத் தவிர்த்துக்­கொள்­ளும் வகை­யில் பணிக்­குச் செல்­லா­மல் இருக்க ஊழி­ய­ருக்­குச் சட்­ட­பூர்­வ­மான உரிமை இருக்­கிறது என்று தான் தன் உறுப்­பி­னர்­க­ளி­டம் கூறி இருப்­ப­தாக 'யுனைட்' என்ற தொழிற்­சங்­கம் கூறி­யது. புதிய வழி­காட்டி நெறி­முறைகளை வெளி­யிட்டுள்ள அர­சு அதன் தொடர்­பில் தன்­னி­டம் ஆலோ­சிக்­க­வில்லை என அரசு தாதிமை கல்­லூரி குறிப்­பிட்­டது.

இத­னி­டையே, பிரிட்­ட­னில் நான்கு வாரங்­க­ளுக்கு முன் நடப்­புக்கு வந்த கட்­டுப்­பா­டு­களை அகற்­று­வது பற்றி அர­சாங்­கம் பரி­சீலிக்­க­வில்லை என்று அமைச்­ச­ரவை அலு­வ­லக அமைச்­சர் மைக்­கேல் கோவ் கூறி­னார்.