ரோம்: கொரோனா கிருமித்தொற்று காரணமாக படுமோசமாக பாதிக்கப்பட்ட இத்தாலியில் பாதிப்பும் மரணங்களும் குறைந்துவந்த போதிலும் ஐரோப்பாவில் அந்த நாடுதான் படுமோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாகத் தொடர்கிறது.
அங்கு கொரோனா கிருமித்தொற்று காரணமாக 23,227 பேர் மாண்டுள்ளனர். இதில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இத்தாலி இருக்கிறது. 175,925 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று குடிமக்கள் பாதுகாப்புத் துறை தெரிவித்தது.
இந்நிலையில், கொரோனா கிருமித்தொற்று காரணமாக நடப்புக்கு வந்துள்ள கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் தளர்த்துவதன் தொடர்பில் கருத்து இணக்கம் வேண்டும் என்று இத்தாலிய அரசாங்கம் விரும்புகிறது.
இருந்தாலும் நாட்டில் பணக்கார வடக்குப் பகுதிக்கும் ஏழ்மை நிலவும் தெற்குப் பகுதிக்கும் இடையில் இதன் தொடர்பில் பதற்றம் அதிகரித்து இருப்பதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

