இந்தோனீசியா: மேலும் 8 பேர் பலி

இந்தோனீசியா: மேலும் 8 பேர் பலி

1 mins read
5a54ba65-9933-4e8c-983c-6a00d478d03f
-

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் புதிதாக 185 பேருக்கு கொரோனா கிருமி தொற்றியதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அவர்களையும் சேர்த்து மொத்தம் 6,760 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று சுகாதார அமைச்சு அதிகாரி யுரியாந்தோ தெரிவித்தார்.

புதிதாக பலியான எட்டு பேரையும் சேர்த்து மொத்தம் 590 பேர் கொரோனா கிருமி காரணமாக மாண்டுவிட்ட தாகவும் 747 பேர் குணமடைந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். நாடு முழுவதும் 41,700க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டு இருப்பதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.

இதனிடையே, கொரோனா கிருமித்தொற்றின் விளைவாக இந்தோனீசிய ஊழியர்களில் சுமார் பாதிபேர் ஏப்ரல் மாதம் வேலையை நிறுத்திவிட்டதாக அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 500 ஊழியர்களை உள்ளடக்கி இணையம் வழி அந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் கலந்துகொண்ட ஆண்களில் 55 விழுக்காட்டி னரும் பெண்களில் 57 விழுக்காட்டினரும் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து வேலையை நிறுத்திவிட்டதாகக் கூறினர் என்று அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. ளைக் கண்டு ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.