ஹாங்காங்: புதிதாக தொற்று இல்லை

ஹாங்காங்: புதிதாக தொற்று இல்லை

1 mins read
5370d9a7-28a5-4abb-8833-4575a6155fef
ஹாங்காங்கில் குடியிருப்புக் கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நால்வருக்கு கொரோனா கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  படம்: இபிஏ, இஎஃப்இ -

ஹாங்காங்: ஹாங்காங்கில் மார்ச் மாதத்திற்குப் பிறகு முதல் தடவையாக நேற்று ஒருவரைக்கூட கொரோனா கிருமி தொற்றவில்லை என்று சுகாதார அதிகாரிகள் கூறினர். இருந்தாலும் நூற்றுக்குநூறு துப்புரவு நடைமுறைகளைக் கடைப்பிடிக்கும்படியும் ஒரு மீட்டர் இடைவெளி நியதியைப் பின்பற்றும்படியும் அனாவசிய பயணங்களைத் தவிர்த்துக் கொள்ளும்படியும் மக்களுக்கு அவர்கள் ஆலோசனை கூறினர். ஹாங்காங்கில் ஜனவரி முதல் 1,025 பேரை கொரோனா கிருமி தொற்றி இருக்கிறது. நான்கு பேர் மாண்டு இருக்கிறார்கள். இதற்கு முன்பாக மார்ச் 5ஆம் தேதி அங்கு ஒருவரைக் கூட கிருமி தொற்றவில்லை.