தென்கொரியா: திரும்பும் வழமை

1 mins read
b735b9a8-f312-440c-9fbe-bb35fb0452d2
-

சோல்: தென்கொரியாவில் கொரோனா கிருமித்தொற்று தொடர்ந்து குறைகிறது. இதனால் ஒரு மீட்டர் இடைவெளி விதி தளர்த்தப்படுகிறது. ஆகையால் மக்கள் வேலைக்குத் திரும்புவதை காண முடிகிறது. கடைத்தொகுதிகள், பூங்காக்கள், கோல்ஃப் திடல்கள், சில உணவகங்களில் கூட்டம் காணப்பட்டது.

தென் கொரியாவில் நேற்று புதிதாக 13 பேருக்குக் கிருமி தொற்றியது. கொரோனா கிருமித்தொற்றுக்கு 236 பேர் பலியாகிவிட்டனர். இன்னமும் 1,000 பேருக்கும் மேற்பட்ட மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

கொரோனா பாதிப்புக்கு இடையில் அந்த நாடு பொதுத் தேர்தலை நடத்தி முடித்துள்ளது. பள்ளிக் கூடங்கள் இன்னமும் திறக்கப்படவில்லை. ஒரு மீட்டர் இடைவெளி விதியை மேலும் 16 நாட்களுக்கு ஞாயிற்றுக் கிழமை நீட்டித்தது. ஆனாலும் சமய, விளை யாட்டு நிகழ்ச்சிகளுக்குச் சலுகை கொடுக்கப்பட்டுள்ளது.