கட்டுப்பாடுகளைப் படிப்படியாக தளர்த்தும் ஜெர்மனி

1 mins read
5830362b-228d-4959-bc0f-9e0fec31f60e
ஜெர்­ம­னி­யின் பேரங்­காடிகளில் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தேவை­யைக் கேட்டு அவர்­க­ளுக்கு வேண்­டி­யதை எடுத்­துக் கொடுக்க மனித இயந்­தி­ரம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது. 'பெப்­பர்' என்று பெய­ரி­டப்­பட்ட அந்த மனித இயந்­தி­ரம், பேரங்­கா­டி­க­ளுக்கு வரும் வாடிக்­கை­யா­ளர்­கள் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் பாதுகாப்பான இடை­வெ­ளி­யைக் கடை­ப்பி­டிக்­கு­மாறு கேட்­டுக் கொள்­கிறது. படம்: இபிஏ -

பெர்­லின்: இயல்­பு­நி­லைக்­குத் திரும்ப ஜெர்­மனி நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறது. ஜெர்­ம­னி­யில் கொரோனா கிரு­மித்­தொற்று கட்­டுக்­குள் வந்­து­விட்­ட­தாக அந்­நாட்டு அர­சி­யல்­வா­தி­கள் அறி­வித்­துள்­ள­னர். இதை­ய­டுத்து, கிரு­மித்­தொற்று கார­ண­மாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட கட்­டுப்­பா­டு­க­ளைப் படிப்­ப­டி­யாக ஜெர்­மனி தளர்த்தி வரு­கிறது. ஜெர்­ம­னி­யில் உள்ள சில இடங்­களில் சிறிய கடை­கள் ஒரு மாதம் கழித்து மீண்­டும் திறக்­கப்­பட்­டன. ஆனால் தலை­ந­கர் பெர்­லி­னில் கடை­கள் இன்­னும் திறக்­கப்­ப­ட­வில்லை. கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்ள ஜெர்­மனி பொரு­ளி­யலை மேம்­ப­டுத்த அந்­நாட்டு அர­சாங்­கம் நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறது.