கனடாவில் பயங்கரம்: 16 பேரை சுட்டுக்கொன்ற துப்பாக்கிக்காரன்

கனடாவில் பயங்கரம்: 16 பேரை சுட்டுக்கொன்ற துப்பாக்கிக்காரன்

1 mins read
aa9cce8e-db8f-4907-a6e0-6a667aab189f
படம்: நியூயார்க் டைம்ஸ் -

நோவா ஸ்கோட்­டியா: கனடா­வின் நோவா ஸ்கோட்­டியா மாநி­லத்­தில் போலிஸ் அதி­கா­ரி­யைப் போல வேட­மிட்ட துப்­பாக்­கிக்­கா­ரன் 16 பேரைச் சுட்­டுக்­கொன்­றான்.

12 மணி நேரம் நீடித்த இந்­தப் பயங்­க­ரச் சம்­ப­வம் நேற்று முன்­தி­னம் நிகழ்ந்­தது.

இதுவே கன­டா­வில் நிகழ்ந்­துள்ள ஆக மோச­மான ஒரே நேரத்­தில் பல­ரைக் கொன்ற துப்­பாக்­கிச்­சூட்டு சம்­ப­வம்.

மாண்டவர்களில் 23 ஆண்டுகளாக கனடா போலிஸ் அதிகாரியாக பணியாற்றிய ஹைடி ஸ்டீவன்சனும் ஒருவர்.

அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

துப்பாக்கிக்காரனான 51 வயது கேப்ரியல் வோர்ட்மன் போலிஸ் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வோர்ட்மன் தமது காரை போலிஸ் வாகனம் போல் வடிவமைத்திருந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.