சிட்னி: கிருமிப் பரவல் மெதுவடைந்தாலும் கட்டுப்பாடுகள் தொடர வேண்டும்'

சிட்னி: கிருமிப் பரவல் மெதுவடைந்தாலும் கட்டுப்பாடுகள் தொடர வேண்டும்'

1 mins read
ff5bdf06-343f-442a-a2b5-f9c55d58532c
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கிருமிப் பரவலுக்கு எதிராக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு உணவு விநியோகிக்கும் தொண்டூழியர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

சிட்னி: ஆஸ்திரேலியாவில் கொரோனா கிருமிப் பரவல் மெதுவடைந்து வருகின்றபோதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் தொடர வேண்டும் என்று 150க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியப் பொருளியல் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா அதன் எல்லைகளை மூடியுள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தையும் அது கட்டுப்படுத்தியுள்ளது. இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலனைத் தந்துள்ளது. மற்றநாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியாவில் கொரோனா கிருமித்தொற்று காரணமான உயிரிழப்புகள் குறைவு. ஆஸ்திரேலியாவில் 6,617 பேர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 71 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கட்டுப்பாடுகளைத் தளர்த்தும்படி ஆஸ்திரேலிய அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை அந்நாட்டின் முன்னணி பொருளியல் நிபுணர்கள் எதிர்க்கின்றனர். கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதே முக்கியம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.