பிரிட்டனில் கூடுதலாக 30,000 தற்காலிகப் பிணவறைகள்

பிரிட்டனில் கூடுதலாக 30,000 தற்காலிகப் பிணவறைகள்

1 mins read
f4e33923-888d-4117-991a-eb7115aa724c
என்எச்எஸ் நைட்டிங்கேல் திடலில் அமைக்கப் பட்டுள்ள மருத்துவமனை நேற்று திறக்கப் பட்டது. அப்போது சுகாதார அமைச்சர் மேட் ஹேன்காக் (வலம்) கொரோனா கிருமிப் பரவலுக்கு எதிராக எடுக்கப் படும் நடவடிக்கை களை செய்தி யாளர்களிடம் விவரித்தார். -

லண்டன்: கொரோனா கிருமித்தொற்று காரணமாக பிரிட்டனில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் கூடுதலாக 30,000 தற்காலிகப் பிணவறைகள் அமைக்கப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஏற்பாடு செய்யப்படுவதாக பிரிட்டிஷ் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். பொதுமக்களைப் பதற்றமடையச் செய்வது தங்கள் நோக்கமல்ல என்றும் ஒருவேளை நிலைமை மோசமானால் அதற்குத் தயாராக இருக்கவே இவ்வாறு செய்வதாகவும் அமைச்சர்கள் கூறினர்.

"இந்தக் கூடுதல் பிணவறைகளைப் பயன்படுத்தும் நிலை ஏற்படக்கூடாது என்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்," என்று அமைச்சர் சைமன் கிளார்க் தெரிவித்தார்.