முஃப்தி: வேறு மாதிரியான ரமலான் மாதத்திற்கு தயாராகுங்கள்

முஃப்தி: வேறு மாதிரியான ரமலான் மாதத்திற்கு தயாராகுங்கள்

1 mins read
68390465-210b-46e1-9780-187880fa1799
சிங்கப்பூர் முஃப்தி நசிருடின் முகம்மது நசிர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கிருமி பரவிவரும் இந்தக் காலகட்டத்தில் சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம்கள் வேறு மாதிரியான ரமலான் மாதத்திற்கு தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என முஃப்தி நசிருடின் முகம்மது நசிர் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், புனித ரமலான் மாதத்தில் முக்கிய கடமைகளான நோன்பு வைப்பதையும் வசதி குறைந்தவர்களுக்கு உதவுவதையும் மனிதில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ரமலான் மாதம் வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) தொடங்குகிறது.

இம்முறை ரமலான் மாதத்தை வழக்கம்போல கடைப்பிடிக்க முடியாததை எண்ணி முஸ்லிம்கள் பலர் வேதனைப்படுவதைத் தம்மால் புரிந்துகொள்ள முடிவதாக டாக்டர் நசிருடின் கூறினார்.

எனினும், எதுவும் இழக்கப்படவில்லை என்றும் ரமலான் மாதத்தை முன்னெப்போதும்போல கடைப்பிடிக்கலாம் என அவர் அறிவுறுத்தினார்.

அவற்றில், நோன்பு வைப்பதும் வசதி குறைந்தவர்களுக்கு 'ஸகாத்' எனப்படும் நன்கொடை வழங்குவதும் முஸ்லிம்களுக்கு இரு முக்கிய கடமைகளாகும்.

"இந்தக் கடமைகள் இஸ்லாமிய சமயத்தின் ஐந்து தூண்களில் அடங்கும். இவற்றை நம்மால் செய்ய முடிவதை எண்ணி நாம் நன்றியுடன் இருக்கலாம்," என்று டாக்டர் நசிருடின் சொன்னார்.

முஸ்லிம்கள் இந்த நேரத்தைப் பயன்படுத்தி இவ்விரு தூண்களைப் பற்றி சிந்தித்துப் பார்த்து ஒவ்வொருவருக்கும் அவை எந்த மாதிரியான அர்த்தத்தைத் தருகின்றன என்று நினைத்துப் பார்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்