'கிம்மின் உடல்நிலை மோசமடையவில்லை'

'கிம்மின் உடல்நிலை மோசமடையவில்லை'

2 mins read
9be42cb6-9a74-417b-bdc1-11a0aeff5e66
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் 2019ஆம் ஆண்டு சந்தித்துக்கொண்டபோது எடுக்கப்பட்ட படம்: ஏஎப்பி -

சோல்: இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட வட­கொ­ரியத் தலை­வர் கிம் ஜோங் உன் கவ­லைக்­கி­ட­மான நிலை­யில் உள்­ள­தாக அமெ­ரிக்கா கூறும் நிலை­யில், கிம்­மின் உடல்­நிலை மோச­மான நிலை­யில் இல்லை என்று தென்­கொ­ரியா மறுப்பு தெரி­வித்­துள்­ளது.

இம்­மா­தத் தொடக்­கத்­தில் இதய அறுவை சிகிச்சை செய்­து­கொண்ட வட­கொ­ரியத் தலை­வர் கிம் ஜோங் உன், கடந்த வாரம் வட­கொ­ரியா நடத்­திய ஏவு­கணை சோத­னை­க­ளி­லும் பங்­கேற்­க­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இ­தய அறுவை சிகிச்சை செய்து­கொண்ட கிம் 'பெரும் ஆபத்­தில்' இருப்­ப­தாக ஒரு அமெ­ரிக்க அதி­கா­ரியை மேற்­கோள்­காட்டி செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது சிஎன்­என் ஊட­கம்.

ஆனால், 36 வய­தான கிம் ஏப்­ரல் 12ஆம் தேதி முதல் குண­ம­டைந்து வரு­வ­தாகப் பெயர் வெளி­யி­டா விரும்பாத ஓர் வட­கொ­ரிய ஆதா­ரத்தை மேற்­கோள்­காட்டி கூறி­யுள்­ளது தென்­கொ­ரியாவின் ஊட­க­மான டெய்லி என்.கே.

அதிகப் புகை­பி­டித்­தல், உடற்­பரு­மன், வேலைப்­பளு ஆகி­ய­வற்­றின் கார­ண­மாகக் சென்ற ஆகஸ்ட் மாதம் முதல் கிம்­மின் உடல்­நிலை மோச­ம­டைந்து வந்த நிலை­யில், கடந்த 12ஆம் தேதி கிம் மருத்­து­வம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து இ­தய அறுவை சிகிச்சை மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகவும் அது தெரிவித்துள்ளது.

சீனா­வும் கிம்­மின் உடல்­ந­லம் குறித்த அறிக்­கை­கள் தனக்­குத் தெரி­யும் என்று கூறி­யது, ஆனால் அவ­ரது உடல்­ந­லம் குறித்த தற்­போ­தைய நில­வ­ரம் குறித்து சீனா எது­வும் கூற­வில்லை.

அதே­ச­ம­யம் கிம்­மின் உடல்­ந­லம் குறித்த தக­வல்­க­ளைத் திரட்ட முயன்று வரு­வ­தாக ஜப்­பான் வெளி­யு­றவு அமைச்சு கூறி­யுள்­ளது.

இதேபோல் 2014ஆம் ஆண்டும் கிம் ஜோங்­கின் உடல்­நிலை கடு­மை­யாக மோச­ம­டைந்­த­தாக செய்தி வெளி­யா­னது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டோனல்டு டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் நலம்பெற வாழ்த்துவதாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறினார்.