பெருநாளுக்காக மக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப தடை

பெருநாளுக்காக மக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப தடை

1 mins read
abb9c033-dd8b-4ee7-a49d-ad7a6581d484
கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச உணவைப் பெறுவதற்காக சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூடிய இந்தோனீசிய மக்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

ஜகார்த்தா: உலக மக்­கட்­தொ­கை­யில் நான்­கா­வது இடத்­தில் உள்ள இந்­தோ­னீ­சி­யா­வில் நோன்புப் பெரு­நாள் கொண்­டாட்­டத்­திற்­காக மக்­கள் சொந்த ஊர்­க­ளுக்­குத் திரும்ப அந்­நாட்டு அதி­பர் ஜோகோ விடோடோ தடை விதித்­துள்­ளார்.

அதி­க­மா­னோர் தங்­கள் சொந்த ஊருக்­குச் செல்ல முற்­படும் இந்த வேளை­யில், கிரு­மிப் பர­வல் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்ற அச்­சத்­தால் இந்­தோ­னீ­சிய அர­சாங்­கம் இந்த முடிவை எடுத்­துள்­ளது.

போக்­கு­வ­ரத்து அமைச்சு மேற்­கொண்ட ஆய்­வில், 24 விழுக்­காட்­டி­னர் தற்­போ­தைய சூழ­லி­லும் பெரு­நாள் கொண்­டாட்­டத்­திற்­காக தங்­கள் சொந்த ஊருக்­குத் திரும்ப விரும்­பு­வது தெரி­ய­வந்­த­தை­ய­டுத்து, தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக விடோடோ தெரி­வித்­தார்.

இந்­தோ­னீ­சிய அறி­வி­யல் கழ­கம் மேற்­கொண்ட ஆய்­வில் சொந்த ஊருக்­குச் செல்ல வேண்­டாம் என்று அர­சாங்­கம் கேட்­டுக்­கொண்­ட­போதும் 44 விழுக்­காட்­டி­னர் சொந்த ஊருக்­குத் திரும்பத் திட்­ட­மிட்­டுள்­ளதும் தெரிய வந்­துள்­ளது.

இந்­தோ­னீ­சி­யா­வில் பெரு­நாள் கொண்­டாட்­டத்­திற்­கான பொது விடு­முறை நாட்­கள் டிசம்­பர் 28-31 தேதிக்­கு ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன.

அங்கு நேற்று வரை 7,135 பேர் கிரு­மித் தொற்­றுக்கு ஆளா­கி­னர், 616 பேர் மாண்­டு­விட்­ட­னர்.