டெங்கி சம்பவங்கள் அதிகரிப்பு

டெங்கி சம்பவங்கள் அதிகரிப்பு

1 mins read
88cd5b62-c300-4858-bde6-a3fe47c8d002
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 139 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டனர். ஆனால் அதே நாளில் கொவிட்-19 கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 84ஆக இருந்தது. சிலாங்கூர், ஜோகூர், கோலாலம்பூர் ஆகிய இடங்களில் டெங்கி பாதிப்பு அதிகம் உள்ளது. படம்: இபிஏ -

பெட்டாலிங் ஜெயா: கொரோனா கிருமியால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களின் பல பகுதிகளில் டெங்கிச் சம்பவங்களும் அதிகம் காணப்படுவதாக மலேசிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 139 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டனர். ஆனால் அதே நாளில் கொவிட்-19 கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 84ஆக இருந்தது. சிலாங்கூர், ஜோகூர், கோலாலம்பூர் ஆகிய இடங்களில் டெங்கி பாதிப்பு அதிகம் உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 29 முதல் ஏப்ரல் 19 வரை மொத்தம் 37,840 டெங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவ்வாண்டில் இதுவரை 63 பேர் டெங்கியால் மாண்டனர்.

இதற்கிடையே, நேற்று 57 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று பதிவானதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,482ஆக அதிகரித்துள்ளது. கிருமித் தொற்றுக்கு மொத்தம் 92 பேர் பலியாகினர்.