ஹாங்காங்: ஹாங்காங்கில் திங்கட்கிழமை முதல் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகவில்லை என்றாலும், அங்கு சமூக கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியைக் கடைப் பிடிப்பது மட்டுமல்லாமல் உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள் போன்ற இடங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
கிருமித் தொற்று பொருளியலில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், கட்டுப்பாட்டை நீட்டிப்பது கடினமான முடிவாக உள்ளது என்றார் ஹாங்காங் தலைவர் கேரி லாம். அங்கு கிருமித்தொற்றால் 1,029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், நால்வர் பலியாகினர்.

