அமெரிக்காவில் குடிநுழைவைத் தற்காலிகமாக நிறுத்த டிரம்ப் திட்டம்

அமெரிக்காவில் குடிநுழைவைத் தற்காலிகமாக நிறுத்த டிரம்ப் திட்டம்

2 mins read
3bdb1b2e-0b8c-484e-af05-e603a04e6638
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள புரூக்லின் நகரில் முகக் கவசம் அணிந்தவாறு செல்லும் மக்கள். படம்: ஏஎப்பி -

வாஷிங்­டன்: கொரோனா கிரு­மித்­தொற்­றால் அமெ­ரிக்­கா­வின் பொரு­ளி­யல் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து அமெ­ரிக்­கா­வுக்­குள் வெளி­நாட்­ட­வர்­கள் வரு­வதை அந்­நாட்டு அதி­பர் டோனல்ட் டிரம்ப் தற்­கா­லி­க­மாக நிறுத்­த­வி­ருக்­கி­றார். அமெ­ரிக்­கர்­களின் வேலை­க­ளைப் பாது­காக்க இவ்­வாறு செய்ய இருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

இது­கு­றித்து அவர் டுவிட்­ட­ரில் பதி­விட்­டார்.

அதி­பர் டிரம்ப்­பின் இந்த முடி­வுக்கு ஜன­நா­ய­கக் கட்­சியை சேர்ந்த சிலர் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர். கொரோனா கிரு­மித்­தொற்றுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை அதி­பர் டிரம்ப் ஒழுங்­காக எடுக்­க­வில்லை என்­றும் தாம் செய்த தவ­று­களை மறைக்­க­வும் மக்­களை திசை திருப்­ப­வும் அவர் இந்த அறி­விப்பை செய்­துள்­ள­தாக அவர்­கள் குறை­கூ­றி­னர்.

கிரு­மித்­தொற்று கார­ண­மாக வர்த்­த­கங்­கள் பாதிக்­கப்­பட்டு மில்­லி­யன் கணக்­கான அமெ­ரிக்­கர்­கள் வேலை­களை இழந்­துள்­ள­னர்.

அவர்­க­ளுக்கு உதவ குடி­நு­ழை­வைத் தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைக்­கப்­போ­வ­தாக அதி­பர் டிரம்ப் வாதி­டு­கி­றார்.

மரண எண்­ணிக்கை 42,000ஐ கடந்­தது

இதற்­கி­டையே, நேற்று முன்­தின நில­வ­ரப்­படி அமெ­ரிக்­கா­வில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் மர­ணம் அடைந்­தோர் எண்­ணிக்கை 42,094ஐ எட்­டி­யது. நேற்று முன்­தி­னம் மட்­டும் 1,433 பேர் மாண்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது.

நியூ­யார்க்­கில் நேற்று முன்­தி­னம் 478 பேர் உயி­ரி­ழந்­த­னர். கடந்த இரண்டு வாரங்­களில் இதுவே அங்கு பதி­வா­கி­யுள்ள ஆகக் குறை­வான மரண எண்­ணிக்கை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இயல்­பு­நி­லைக்­கு­த் திரும்­பு­வது குறித்து மாறு­பட்ட கருத்­து­கள்

அமெ­ரிக்க மாநி­லங்­க­ளி­டம் போது­மான கொரோனா கிரு­மித்­தொற்று மருத்­து­வப் பரி­சோ­த­னைச் சாத­னங்­கள் இருப்­ப­தா­க­வும் மாநி­லங்­கள் இயல்­பு­நி­லைக்­குத் திரும்­ப­லாம் என்­றும் அமெ­ரிக்­கத் துணை அதி­பர் மைக் பென்ஸ் கூறி­யுள்­ளார்.

இயல்­பு­நி­லைக்­குத் திரும்ப கடந்த 14 நாட்­க­ளாக கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை குறைந்­தி­ருக்க வேண்­டும். அது­மட்­டு­மல்­லாது, ஒரு­வேளை நிலைமை மோச­ம­டைந்­தால் அதைச் சமா­ளிக்­கக்­கூ­டிய அள­வுக்கு மருத்­துவ வச­தி­கள் இருக்க வேண்­டும்.

துணை அதி­ப­ரின் கருத்­து­கள் ஒரு புறம் இருக்க, கிரு­மித்­தொற்­றுக்­கான மருத்­து­வப் பரி­சோ­த­னை­களை மூன்று மடங்­காக அதி­க­ரித்த பிறகே அமெ­ரிக்­கா­வால் இயல்­பு­

நி­லைக்­குத் திரும்ப முடி­யும் என்று மருத்­துவ நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.