'கொவிட்-19 விலங்கிலிருந்து வந்திருக்கலாம்'

'கொவிட்-19 விலங்கிலிருந்து வந்திருக்கலாம்'

1 mins read
5b653d74-f9bf-4a21-b1f5-2bca4fd3098d
-

ஜெனீவா: கொரோனா கிருமித்தொற்று கடந்த ஆண்டு சீனாவில் உள்ள வௌவால்களிலிருந்து வந்திருக்கலாம் என்று அனைத்து ஆதாரங்களும் காட்டுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா கிருமி வேண்டுமென்றே ஆய்வுக்கூடங்களில் உருவாக்கப்பட்டவை என குரல்கள் எழுந்துள்ளன. இதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்று அது கூறியது.

கொரோனா கிருமி சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டதா என்பது குறித்து கண்டுபிடிக்க தமது அரசாங்கம் முயன்று வருவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.