ஹாங்காங்: அமைச்சரவை மாற்றம் பற்றி விளக்கம்

ஹாங்காங்: அமைச்சரவை மாற்றம் பற்றி விளக்கம்

1 mins read
e01edefd-6b49-44af-b941-5e75e0880245
ஹாங்காங்கில் சமூக இடைவெளிக் கட்டுப்பாடு மே மாதம் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. படம்: புளூம்பெர்க் -

பெய்ஜிங்: ஹாங்காங்கில் பல அமைச்சர்கள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளியலுக்குப் புத்துயிர் அளிக்கவே அந்த மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக ஹாங்காங் நிர்வாக அதிகாரி கேரி லாம் தெரிவித்தார்.

ஹாங்காங்கில் சீனாவின் அதிகாரத்தை மறுஉறுதிப்படுத்தும் வகையில்தான் அந்த மாற்றங்கள் இடம்பெறுகின்றன என்று சீனப் பெருநிலத்தின் சில அமைப்புகள் தெரிவித்ததற்கும் அமைச்சரவை மாற்றத்துக்கும் தொடர்பு எதுவும் இல்லை என்று அவர் விளக்கினார். ஹாங்காங் அரசாங்க மாற்றத்தை சீனாவின் மத்திய மன்றம் அங்கீகரித்து இருக்கிறது.