பேங்காக்: தாய்லாந்தில் நேற்று புதிதாக 13 பேருக்கு கொரோனா கிருமி தொற்றியதாகவும் நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இருந்த 58 வயது மாது ஒருவர் கொரோனா தொற்று காரணமாக பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்த நாட்டில் கொரோனா வேகம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இருந்தாலும் எச்சரிக்கையுடன் இருந்துகொள்ளவேண்டும் என்று அதிகாரிகள் மக்களை வலியுறுத்தி வருகிறார்கள்.
பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைகிறது என்றாலும் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கைவிட்டு விடக்கூடாது என்று கொரோனா கிருமித்தொற்று கட்டுப்பாட்டு அமைப்பின் பேச்சாளர் தவீசின் விஷானுயோதின் தெரிவித்தார். தாய்லாந்தில் இதுவரை 2,826 பேரைக் கிருமி தொற்றி உள்ளது. 49 பேர் பலியாகி விட்டனர்.

