'மக்கள் பசி, பட்டினியால் வாடும் நிலை ஏற்படக்கூடும்'

'மக்கள் பசி, பட்டினியால் வாடும் நிலை ஏற்படக்கூடும்'

2 mins read
1aaed3bd-e3b2-4d88-8125-6385e8e4adeb
அமெரிக்காவின் செல்சியில் உள்ள தற்காலிக உணவறையில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு உணவு விநியோகிக்கும் மாசசூசெட்ஸ் ராணுவ தேசிய காவற்படையின் உறுப்பினர்கள். கிருமிப் பரவல் காரணமாக வேலையிழந்துள்ள பலர் உணவுக்காக நன்கொடை அமைப்புகளைச் சார்ந்துள்ளனர். படம்: இபிஏ -

வாஷிங்­டன்: உலக நாடு­கள் கொரோனா தொற்­று­நோ­யைக் கையாள்­வ­தில் கவ­னம் கொண்­டுள்ள வேளை­யில், அடுத்து மக்­கள் அனை­வ­ரும் பசி, பட்­டி­னி­யால் வாடும் நெருக்­க­டி­நிலை உரு­வா­கக்­கூ­டும் என்று ஐக்­கிய நாடு­கள் அமைப்பு எச்­ச­ரித்­துள்­ளது.

அத­னைத் தடுக்க உலக நாடு­கள் உட­னடி நட­வ­டிக்கை எடுக்­க­வில்­லை­யென்­றால், அது பஞ்­சத்­திற்கு வழி­வ­குக்­கும் என்­றும் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

கிரு­மித்­தொற்­றால் இறப்­ப­வர்­க­ளை­விட கொரோ­னா­வால் ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தார நெருக்­க­டி­யால் அதி­க­மான மக்­கள் இறக்­கக்­கூ­டும் என்ற ஆபத்து நில­வு­வ­தா­க­வும் உலக உண­வுத் திட்ட நிர்­வாக இயக்­கு­னர் டேவிட் பீஸ்லி சொன்­னார்.

கிரு­மித்தொற்று அச்­சம் தொடங்­கு­வ­தற்கு முன்பே, "இரண்­டாம் உல­கப் போருக்­குப் பின்­னர் 2020ஆம் ஆண்­டில் உல­கம் மிக மோச­மான மனி­தநேய நெருக்­க­டியை எதிர்­கொள்­ளும்," என்று ஐநா­வி­டம் அவர் கூறி­யி­ருந்­தார்.

சிரியா, ஏமன் போன்ற நாடு­களில் நடக்­கும் உள்­நாட்டு போர், ஆப்­பி­ரிக்­கா­வில் விவ­சாய நிலத்­தைச் சேதப்­ப­டுத்­தும் வெட்­டுக்­கி­ளி­கள், அடிக்­கடி நிக­ழும் இயற்கை பேர­ழிவு, பொரு­ளா­தார நெருக்­கடி போன்­ற­வற்­றின் கார­ண­மாக அவ்­வா­றான நிலை ஏற்­படும் என்று அவர் தெரி­வித்­தி­ருந்­தார்.

உல­கம் முழு­வ­தும் சுமார் 821 மில்­லி­யன் பேர் ஒவ்­வோர் நாளும் பசி­யோடு உறங்­கச் செல்­வ­தா­கக் கூறிய அவர், நிலைமை மோச­ம­டை­யும்­போது மேலும் 135 மில்­லி­யன் மக்­கள் அதே நிலையை எதிர்­கொள்­வ­தா­கக் கூறி­யி­ருந்­தார்.

இந்நிலையில், கிரு­மித்­தொற்று நெருக்­க­டி­யால் 2020ஆம் ஆண்­டின் இறு­தி­வாக்­கில், இன்­னும் கூடு­த­லாக 130 மில்­லி­யன் மக்­கள் பசி­யின் விளிம்­பிற்­குத் தள்­ளப்­ப­டு­வார்­கள் என்­கிறது உலக உண­வுத் திட்­டத்­தின் புதிய ஆய்வு.

"ஒவ்­வோர் நாளும் நாங்­கள் சுமார் 100 மில்­லி­யன் பேருக்கு உணவு வழங்கி வரு­கி­றோம். அவர்­களில் 30 மில்­லி­யன் மக்­கள் உண­வுக்­காக முற்­றி­லும் எங்­க­ளையே சார்ந்­துள்­ள­னர்," என்­றார் பீஸ்லி.

அவர்­க­ளுக்கு உணவு கிடைக்­க­வில்­லை­யென்­றால் மூன்று மாத இடை­வெ­ளி­யில் சுமார் 300,000 பேர் பசி­யால் இறக்­கக்­கூ­டும் என்று தங்­க­ளு­டைய ஆய்வு காட்­டு­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.