மலேரியா எதிர்ப்பு மருந்தை பயன்படுத்துவதில் பின்னடைவு

மலேரியா எதிர்ப்பு மருந்தை பயன்படுத்துவதில் பின்னடைவு

1 mins read
b9990180-0a91-47b0-9ace-764001a09fd2
கோப்புப்படம்: ஏஎஃப்பி -

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மலேரியா எதிர்ப்பு மருந்தைப் பயன்படுத்து

வதற்கான திட்டம் ஒரு பின்னடைவைச் சந்தித்துள்ளது. மலேரியா எதிர்ப்பு மருந்து வழங்கப்பட்டவர்களிடையே அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

இருப்பினும், மற்றொரு அறிக்கை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க மலேரியா எதிர்ப்பு மருந்தைப் பரிந்துரைக்கவோ அல்லது எதிர்க்கவோ போது

மான மருத்துவ தகவல்கள் இல்லை என்று கூறுகிறது.

தன்னுடைய சொந்த வர்த்தக நலன்களுக்காக டிரம்ப் எந்த ஒரு விஞ்ஞான ஆதாரமும் இல்லாமல் மலேரியா எதிர்ப்பு மருந்தைப் பரிந்துரை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இதுகுறித்த அறிக்கையை படித்துப் பார்த்துவிட்டு பதில் சொல்வதாகக் கூறியுள்ளார் டிரம்ப்.