ரமலான் நோன்பை வீட்டிலேயே கடைப்பிடிக்க வேண்டுகோள்

ரமலான் நோன்பை வீட்டிலேயே கடைப்பிடிக்க வேண்டுகோள்

1 mins read
7027bd09-159b-4dda-a3ac-0c0fc7dc92c3
அரசாங்கம் வழங்கும் இலவச உணவுப் பொருட்களைப் பெற்று செல்லும் இந்தோனீசியர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

ஜகார்த்தா: கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் வித­மாக, ரம­லான் நோன்பை வீட்­டி­லேயே கடை­ப்பி­டிக்­கு­மாறு இந்­தோ­னீ­சிய முஸ்­லிம்­களை அந்­நாட்­டின் பெரும் இஸ்­லா­மிய அமைப்­பு­க­ளான நஹ்­த­லத்­துல் உலமா மற்­றும் முஹம்­ம­தியா ஆகி­யன கேட்­டுக் கொண்­டுள்­ளன.

இந்­தோ­னீ­சிய மக்­கட்­தொ­கை­யில் சுமார் 80 விழுக்­காட்­டி­ன­ருக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் மாலை நேர தொழுகை, குடும்­பத்­தி­னர், நண்­பர்­க­ளோடு இஃப்தார் உண்­பது, குடும்­பச் சந்­திப்­பு­கள் போன்ற சமூக நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வது வழக்­கம்.

ஆனால் கிரு­மித்­தொற்று பாதிப்­பைக் குறைக்கும் நோக்­கில் அவ்­வா­றான மர­பு­களைக் கைவி­டு­மாறு கேட்­டுக் கொள்­ளப்­பட்­டுள்­ளது.

நேற்றைய நில­வ­ரப்­படி அங்கு 7,775 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர், 647 பேர் பலி­யா­கி­னர்.