மலேசியாவில் கட்டுப்பாட்டு உத்தரவு மே 12 வரை நீட்டிப்பு

மலேசியாவில் கட்டுப்பாட்டு உத்தரவு மே 12 வரை நீட்டிப்பு

2 mins read
2b1ed139-12c6-4137-823e-c508a65aae86
மூன்றாம் கட்ட கட்டுப்பாட்டு உத்தரவு வரும் 28ஆம் தேதியோடு முடிவடையும் நிலையில், அது மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. படம்: இபிஏ -

புத்­ரா­ஜெயா: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு மே 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் நேற்று இரவு அறிவித்தார்.

நடப்பில் உள்ள மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு வரும் 28ஆம் தேதியோடு முடிவடையவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­யின் கார­ண­மாக, மதி­யம் 12 மணி வரை இயங்கி வந்த ஈரச் சந்­தை­கள், நோன்பு திறப்­புக்­கான உண­வுப் பொருட்­களை வாங்­கு­வ­தற்கு ஏது­வாக இனி மதி­யம் 2 மணி வரை­யில் செயல்­படும் என தற்­காப்பு அமைச்­சர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் தெரி­வித்­து

உள்­ளார்.

மேலும், ரம­லான் நேரத்­தில் சொந்த ஊருக்­குச் செல்­வ­தற்கு யாருக்­கும் அனு­ம­தி­யில்லை என்றும் திரு. யாக்­கோப் கூறி­யுள்­ளார்.

பய­ணத் திட்­டங்­களைக் கொண்­டி­ருப்­ப­வர்­கள் அதி­கா­ரி­க­ளி­டம் பதிந்துகொள்­ளும்­படி நேற்று முன்­தி­னம் அவர் கேட்­டுக்­கொண்­டி­ருந்­தது தொடர்­பாக விளக்­கம் அளித்த அவர் இவ்­வாறு சொன்­னார்.

தற்­போது கிரா­மப்­பு­றத்தில் சிக்­கிக் கொண்­ட­வர்­கள் மட்­டுமே பயண அனு­ம­திக்குப் பதிவு செய்ய வேண்­டும் என்றார் அவர்.

இதற்கிடையே, மலே­சி­யா­வில் சுகா­தார அமைச்­சின் 325 அதி­காரி

­கள் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­ன­தா­க­வும் அவர்­களில் 185 பேர் பூர­ண­மாக குண­ம­டைந்­து­விட்­ட­தா­க­வும் சுகா­தா­ரத் துறை­யின் தலைமை இயக்­கு­னர் டாக்­டர் நூர் ஹிஷாம் அப்­துல்லா தெரி­வித்­துள்­ளார்.

கிரு­மித்­தொற்­றுக்கு ஆளான சுகா­தார அமைச்­சின் அனைத்து அதி­கா­ரி­க­ளுக்­கும் நோயா­ளி­களி

டம் இருந்து கிரு­மித்­தொற்­ற­வில்லை என்ற அவர், 70 விழுக்­காட்­டி­னர் வர­வேற்பு நிகழ்ச்­சி­களில் கலந்­து­கொண்­ட­வர்­கள் மற்றும் வெளி­நாடு சென்று திரும்­பி­ய­வர்­கள் என்­றும் சொன்­னார்.

இந்நிலையில், நேற்று மாண்­ட­ இருவரில் ஒரு­வர் சுகா­தார அமைச்­சின் அதி­காரி ஆவார்.

கிரு­மித்­தொற்­றுக்கு பலி­யான சுகா­தார அமைச்­சின் மூன்­றா­வது அதி­காரி இவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

புதி­தாக 71 பேருக்­குக் தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 5,603ஆக உயர்ந்­துள்­ளது. 95 பேர் பலியாகினர்.

இது­வரை மொத்­தம் 3,542 பேர், அதா­வது 63.2 விழுக்­காட்­டி­னர் கிரு­மித்­தொற்­றி­லி­ருந்து குண­ம­டைந்­துள்­ள­னர்.