ஆஸ்திரேலிய எல்லைகள் மேலும் மூன்று மாதங்களுக்கு மூடல்

சிட்னி: கொரோனா கிரு­மித் தொற்­றில் இருந்து பாது­காத்­துக் கொள்­ளும் வித­மாக, ஆஸ்­தி­ரே­லி­யா­வில் மற்ற கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டா­லும் அனைத்­து­லக எல்­லை­கள் மேலும் மூன்று அல்­லது நான்கு மாதங்­க­ளுக்கு மூடப்­பட்­டி­ருக்­கும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

“தற்போதைய அனைத்துலக நிலவரப்படி, எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்துவது மிகவும் ஆபத்தானது,” என்றார் ஆஸ்திரேலிய தலைமை மருத்துவ அதிகாரி பிரென்டன் மர்பி.

இதற்கிடையே, ஆஸ்­தி­ரே­லிய குடி­யி­ருப்­பா­ளர்­கள் அனை­வ­ரும் சிங்­கப்­பூ­ரில் வடி­வ­மைக்­கப்­பட்ட கொரோனா தொடர்பு தட­ம­றி­தல் செய­லியை பயன்­ப­டுத்த வேண்­டும் என்று விருப்­பம் தெரி­வித்­துள்­ளார் அந்­நாட்டு பிர­த­மர் ஸ்காட் மோரி­சன்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் ஏற்­கெ­னவே கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை குறைந்­துள்ள நிலை­யில், செயலி பயன்­பாடு அந்த எண்­ணிக்­கையை மேலும் குறைக்க உத­வும் என்­கி­றார் மோரி­சன்.

ஆனால் மோரி­ச­னின் இந்த விருப்­பம் அங்­குச் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. செயலி பயன்­பாடு தேவை­யற்ற ஒன்று என்­றும் அது ஒரு­வ­ரின் தனி­யு­ரிமை பற்­றிய கவ­லை­களை எழுப்­பு­வ­தா­க­வும் விமர்­ச­கர்­கள் கருத்து தெரி­வித்­துள்­ள­னர்.

குறைந்­த­பட்­சம் 40 விழுக்­காட்டு அள­விற்­குச் செய­லி­யைப் பயன்­ப­டுத்த விரும்­பும் அவர், அது தற்­போ­தைய முடக்க நிலையை விரை­வில் தளர்த்த உத­வும் என்றார்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் புதன்­கி­ழமை நில­வ­ரப்­படி 6,652 பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர், 74 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

செவ்வாயன்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!