உணவுப் பொருட்களை வாங்கி குவிக்கும் வடகொரிய மக்கள்

உணவுப் பொருட்களை வாங்கி குவிக்கும் வடகொரிய மக்கள்

1 mins read
1fd98353-2114-46a2-ac09-7d2c533c3437
வட­கொ­ரி­யா­வில் உணவு பற்­றாக்­குறை என்­பது புதிது அல்ல என்­றும் 1990களில் அங்கு நில­விய பஞ்­சம் கார­ண­மாக 10 விழுக்­காட்டு மக்­கள் மடிந்­ததா­க­வும் கூறப்­ப­டு­கிறது. இதற்­கி­டையே, கிம் உடல்­ந­ல­மில்­லாத நிலை­யில், அவ­ரது பரம்­ப­ரை­யி­னர் அதி­கா­ரத்­தைக் கைப்­பற்ற முய­லும்போது வன்­முறை வெடிக்­கக்­கூ­டும் என்ற யூகங்­களும் நிலவு­கின்­றன. படம்: ஏஎப்பி -

சோல்: வட­கொ­ரி­யா­வின் பியோங்­யாங் நகர மக்­கள் பீதி­யில் உண­வுப் பொருட்­களை வாங்­கிக் குவிப்­ப­தா­க­வும் அத­னால் சில கடை­கள் காலி­யா­ன­தா­க­வும் வட­கொ­ரியச் செய்­தி­களை வெளி­யி­டும் அமெ­ரிக்­காவை அடிப்­ப­டை­யாகக் கொண்ட என்கே செய்தி நிறு­வ­னம் கூறி­யுள்­ளது.

மக்­கள் இப்­படி பொருட்­களை வாங்­கிக் குவிப்­ப­தற்­கும் வட­கொ­ரியத் தலை­வர் கிம் ஜோங் உன்­னின் உடல்­நிலை மோச­ம­டைந்து உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­வ­தற்­கும் எந்­தச் சம்­பந்­த­மும் இருப்­ப­தாக தெரி­ய­வில்லை என்று அந்த செய்தி கூறு­கிறது.

அதே­வே­ளை­யில், பியோங்­யாங்­கில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள கொரோனா கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­க­ளின் கார­ண­மாக மக்­கள் உண­வுப் பொருட்­களை வாங்­கிக் குவிக்­க­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.

ஆரம்­பத்­தில் இறக்­கு­மதி செய்­யப்­பட்ட பழங்­கள் மற்­றும் காய்­க­றி­க­ளுக்கு மட்­டுமே பற்­றாக்­குறை நில­விய நிலை­யில், தற்­போது மற்ற பொருட்­க­ளுக்­கும் பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ள­தா­கக் கூறு­கிறது அச்­செய்தி.

மக்­கள் உண­வுப் பொருட்­களை வாங்­கிக் குவிப்­ப­தால், வட­கொ­ரி­யா­வில் பொருட்­க­ளின் விலை உயர்ந்­துள்­ள­தாகக் கடந்த வாரம் ரேடியோ ஃப்ரி ஆசியா செய்தி நிறு­வ­னம் கூறி­யி­ருந்­தது.

வட­கொ­ரி­யா­வில் உணவு பற்­றாக்­குறை என்­பது புதிது அல்ல என்­றும் 1990களில் அங்கு நில­விய பஞ்­சம் கார­ண­மாக 10 விழுக்­காட்டு மக்­கள் மடிந்­ததா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, கிம் உடல்­ந­ல­மில்­லாத நிலை­யில், அவ­ரது பரம்­ப­ரை­யி­னர் அதி­கா­ரத்­தைக் கைப்­பற்ற முய­லும்போது வன்­முறை வெடிக்­கக்­கூ­டும் என்ற யூகங்­களும் நிலவு­கின்­றன.