ஹனோய்: திரளான தனிமைப்படுத்தல்கள், விரிவான தொடர்புத் தடமறிதல் ஆகியவற்றின் காரணமாக கிருமித்தொற்று சம்பவங்கள் குறைந்துள்ள நிலையில், சமூக இடைவெளி கட்டுப்பாடுகளை வியட்னாம் நேற்று தளர்த்தியது.
சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடாக இருக்கும்போதும் வியட்னாமில் இதுவரை கிருமித்தொற்றால் மரணங்கள் இல்லை. வெறும் 268 பேருக்கு மட்டுமே கிருமித் தொற்றியது.
ஆனாலும் இங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அளவு குறைவாக இருப்பதாகவும் சுகாதார அமைச்சு மட்டுமே புள்ளிவிவரங்களுக்கான ஒரே ஆதாரமாக இருப்பது குறித்தும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

