அமெரிக்காவில் பச்சை அட்டை, நிரந்தரவாசம் வழங்குவது நிறுத்தி வைப்பு

அமெரிக்காவில் பச்சை அட்டை, நிரந்தரவாசம் வழங்குவது நிறுத்தி வைப்பு

2 mins read
3e25e421-1e6e-4c49-8c1a-7e4ebebfda5d
அமெ­ரிக்­கா­வில் குடி­நு­ழைவு தற்­கா­லி­க­மாக ரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. இதற்­கான சிறப்பு உத்­த­ர­வில் அமெ­ரிக்க அதி­பர் டோனல்ட் டிரம்ப் கையெ­ழுத்­திட்­டுள்­ளார். படம்: ஏஎஃப்பி -

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வில் குடி­நு­ழைவு தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்­கான சிறப்பு உத்­த­ர­வில் அமெ­ரிக்க அதி­பர் டோனல்ட் டிரம்ப் கையெ­ழுத்­திட்­டுள்­ளார்.

இதன்­படி அமெ­ரிக்­கா­வில் பணி­பு­ரிய வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான சில பச்சை அட்­டை­கள் தற்­கா­லி­க­மாக வழங்­கப்­ப­டாது.

கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக உலக நாடு­க­ளைக் காட்­டி­லும் அமெ­ரிக்­கா­வில்­தான் அதிக உயி­ரி­ழப்­பு­கள் ஏற்­பட்­டுள்­ளன.

அது­மட்­டு­மல்­லாது, அந்­நாட்­டின் பொரு­ளி­யல் மிகக் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இதன் விளை­வாக மில்­லி­யன் கணக்­கான அமெ­ரிக்­கர்­கள் தங்­கள் வேலை­களை இழந்­தி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அமெ­ரிக்­கர்­க­ளின் வேலை­க­ளைப் பாது­காக்க இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக திரு டிரம்ப் தெரி­வித்­துள்­ளார்.

இந்­தத் தற்­கா­லிக குடி­நு­ழைவு நிறுத்­தம் 60 நாட்­க­ளுக்கு நடப்­பில் இருக்­கும் என்­றும் அது நீட்­டிக்­கப்­ப­டக்­கூ­டும் என்­றும் அதி­பர் டிரம்ப் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, கிரு­மித்­தொற்­றைக் கார­ண­மாக வைத்து நீண்­ட­கா­ல­மாக நடை­மு­றைப்­ப­டுத்த விரும்­பிய திட்­டங்­களை அதி­பர் டிரம்ப் தேர்­தல் ஆண்­டில் அமல்­ப­டுத்­து­வ­தாக அவ­ருக்கு எதி­ராக விமர்

சனங்­களை வைப்­ப­வர்­கள் அதி­ருப்­திக் குரல் எழுப்­பி­யுள்­ள­னர்.

பச்சை அட்டை வைத்­தி­ருக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்­கள் குடும்­பத்­தி­னர்­களை நிரந்­த­ர­வாசி களாக்க அவர்­களை அமெ­ரிக்­கா­வுக்கு அழைத்து வரு­வதை இந்­தப் புதிய நட­வ­டிக்கை தடுக்­கும் என்று அதி­பர் டிரம்ப் தெரி­வித்­தார்.

ஆனால் அமெ­ரிக்­கர்­க­ளின் வெளி­நாட்­டுக் கண­வன் அல்­லது மனைவி, 21 வய­துக்­கும் குறை­வான திரு­ம­ண­மா­காத பிள்­ளை­கள் ஆகி­யோர் இதற்கு விதி­வி­லக்கு.

சீன உள­வுத்­துறை பதற்றநிலையை ஏற்­ப­டுத்­தி­யது. இதற்­கி­டையே, கொரோனா கிரு­மித்­தொற்று தொடர்­பாக அமெ­ரிக்­கர்­க­ளி­டையே சீன உள­வுத்­துறை பதற்­ற­நி­லையை ஏற்­ப­டுத்­தி­ய­தாக அதி­பர் டிரம்ப் குற்­றம் சாட்­டி­யுள்­ளார். அமெ­ரிக்­கா­வில் முடக்­க­நிலை அறி­விக்­கப்­பட இருப்­ப­தாக கடந்த மாதம் அமெ­ரிக்­கர்­க­ளின் கைபே­சி­க­ளுக்­கும் சமூக ஊட­கக் கணக்­கு­க­ளுக்­கும் பொய்ச் செய்தி கள் அனுப்­பி­வைக்­கப்­பட்­ட­தாக அவர் தெரி­வித்­தார். அவற்றை சீன உள­வுத்­து­றை­யி­னர் அனுப்­பி­ய­தாக அமெ­ரிக்க உள­வுத்­துறை அதி­கா­ரி­கள் கூறி­னர்.