'கிருமித்தொற்றைப் பயன்படுத்தி தனிமனித உரிமைகளை நசுக்கக்கூடாது'

'கிருமித்தொற்றைப் பயன்படுத்தி தனிமனித உரிமைகளை நசுக்கக்கூடாது'

1 mins read
6e00a108-417f-4250-b1ce-b2762b133db9
-

நியூ­யார்க்: கொரோனா கிரு­மித்­தொற்றைத் தமக்­குச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்தி தனி­ம­னித உரி­மை­களை நசுக்­கு­வது ஏற்­றக்­கொள்­ளக்­கூ­டி­ய­தல்ல என்று ஐநா தலை­மைச் செய­லா­ளர் அன்டோ­னியோ குட்டெரஸ் நேற்று தெரி­வித்­தார்.

கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்த சில நாடுகளின் அர­சாங்­கங்­கள் வழக்­கத்­துக்கு மாறான பல நட­வ­டிக்­கை­களை நடை­

மு­றைப்­ப­டுத்­தி­யுள்­ளதாக அவர் கூறினார். நெருக்­க­டி­நி­லை­யைக் கார­ண­மா­கக் காட்டி சில அர­சாங்­கங்­கள் தனி­ம­னித உரி­மை­க­ளைப் பறிக்­கக்­கூ­டும் என்று மனித உரிமை அமைப்­பு­கள் கவலை தெரி­வித்­துள்­ள­ன.

பொது­மக்­க­ளுக்கு எதி­ரான வன்­முறை, பத்­தி­ரிகை சுதந்­தி­ரம்,

கைபே­சி­கள் மூலம் என்­னென்ன தக­வல்­கள் பகிர்ந்­து­கொள்­ளப்­ப­டு­கின்­றன எனக் கண்­கா­ணிப்­பது போன்ற நட­வ­டிக்­கை­களில் சில அர­சாங்­கங்­கள் ஈடு­ப­டு­வதை மனித உரிமை அமைப்­பு­கள் சுட்­டி­ன.

"கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தா­கக் கூறி தேசி­ய­வா­தம், உயர்­மட்ட மக்­க­ளுக்கு எதி­ரான அறை­கூ­வல், சர்­வா­தி­கா­ரம், தனி­

ம­னித உரி­மை­க­ளைப் பறித்­தல் போன்ற நட­வ­டிக்­கை­களில் சில அர­சாங்­கங்­கள் ஈடு­ப­டக்­கூ­டும். இவை கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்

­ப­டுத்த எடுக்­கப்­படும் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளு­டன் தொடர்­பில்­லா­தவை. இது ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தது," என்று திரு குட்டெரஸ் தமது அறிக்­கை­யில் தெரி­வித்­தார்.

"தனி­ம­னித சுதந்­தி­ரம், பத்­தி­ரிகை சுதந்­தி­ரம் மிக­வும் முக்­கி­யம். சமு­தா­யத்­தில் பொது­மக்­கள் தொடர்­பான அமைப்­பு­க­ளுக்­கும் தனி­யார் துறைக்­கும் முக்­கிய பங்­குண்டு. மிரட்­டல் கிரு­மி­யி­ட­மி­ருந்­து­தான் வரு­கிறது, மக்­க­ளி­ட­மி­ருந்து இல்லை என்­பதை நாம் புரிந்­து­கொள்ள வேண்­டும்," என்று திரு குட்டெரஸ் தெரி­வித்­தார்.

எடுக்கப்படும் நடவடிக்கைகளின் நீண்டகால விளைவுகளைப் பற்றி அரசாங்கம் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று உலக நாடுகளுக்கு ஐநா அறிவுறுத்தியுள்ளது.