கொள்ளைநோய் நெருக்கடியிலும் தேர்வெழுதிய மாணவர்கள்

கொள்ளைநோய் நெருக்கடியிலும் தேர்வெழுதிய மாணவர்கள்

1 mins read
656d3786-6ec6-468d-b36b-885b6864719e
தேர்வெழுதிய உயர்நிலைப் பள்ளி மாணவர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

ஹாங்­காங்: கொவிட்-19 கிருமி நெருக்­கடி கார­ண­மாக பல மாதங்­க­ளாக வீட்­டுக்­குள் அடை­பட்­டுக் கிடந்த ஹாங்­காங் உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­கள் நேற்று தங்­க­ளது இறுதித் தேர்வை எழு­தி­னர்.

கொள்ளை நோய் கொடூ­ரம் தணி­யாத நிலை­யில் பள்ளி இறு­தித் தேர்வை எழு­திய மாண­வர்­கள் உல­கி­லேயே இவர்­கள் மட்­டும்­தான் என ஊட­கங்­கள் குறிப்­பி­டு­கின்­றன. உயர்­நி­லைக் கல்வி பட்­ட­யத் தேர்­வு­கள் நான்கு வார தாம­தத்­திற்­குப் பின்­னர் நேற்று தொடங்­கின. ஹாங்­காங்­கில் கொவிட்-19 கிருமி நில­வ­ரம் மேம்­பட்­ட­தைத் தொடர்ந்து தேர்­வெ­ழுத அனு­ம­திக்­கப்­பட்­டது.

மாண­வர்­கள் அனை­வ­ரும் முகக்­க­வ­சம் அணிந்­தி­ருந்­த­னர். ஒவ்­வொ­ரு­வ­ரின் உடல்­வெப்­ப­மும் பரி­சோ­திக்­கப்­பட்­டது. சமூக இடை­வெ­ளி­யை­யும் அவர்­கள் கடைப்­பி­டித்­த­னர். ஹாங்­காங்­கில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 1,036. வியா­ழக்­கி­ழமை இரு­வர் மட்­டுமே பாதிக்­கப்­பட்­ட­னர். குறிப்­பாக, கடந்த திங்­கட்­கி­ழமை அங்கு ஒரு­வ­ருக்­குக்­கூட கிரு­மித்­தொற்று ஏற்­ப­ட­வில்லை. இது­வரை நான்கு பேர் மாண்­டு­விட்­ட­னர். அத­னைத் தொடர்ந்து உல­க­ள­வில் கிரு­மி­யால் ஆகக் குறைந்த உயிர்ப்­பலி நிகழ்ந்த இடங்­க­ளுள் ஒன்­றாக ஹாங்­காங் கரு­தப்­ப­டு­கிறது.