ஜகார்த்தா: கொரோனா கிருமி அபாயத்தைத் தணிக்கக்கூடிய சமூக இடைவெளி விவகாரத்தில் இந்தோனீசியா அலட்சியம் காட்டுவதாகவும் அதன் காரணமாக மற்ற தென்கிழக்காசிய நாடுகளைக் காட்டிலும் அது தாமதமாக பொருளியல் மீட்சியடையக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
நாட்டின் பெரும்பகுதிக்கான சமூக இடைவெளி விதிகளை மறு
பரிசீலனை செய்வதாக அதிபர் ஜோக்கோ விடோடோ அறிவித்தார்.
மலேசியா, இந்தியா போன்ற ஆசிய நாடுகள் நாடு தழுவிய முடக்கத்தைக் கடைப்பிடித்து வரும் வேளையில் இந்தோனீசியாவில் அவ்வாறின்றி சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.
270 மில்லியன் மக்கள்தொகையில் மூன்றில் இரு மடங்கினர் மட்டுமே கட்டாயத் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி இந்தோனீசியாவில் 260 நகரங்களுக்கு கிருமித்தொற்று பரவிவிட்டது. கிருமியின் தாக்கம் தணிவதற்குள் 95,000 மக்கள் பாதிப்படையக்கூடும் என இந்தோனீசிய அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.

