91 கப்பல் ஊழியர்கள் பாதிப்பு

91 கப்பல் ஊழியர்கள் பாதிப்பு

1 mins read
9ca9550a-25fc-4451-9e6e-7e4fc42552d7
பழுதுபார்ப்புப் பணிகளுக்காக பிப்ரவரி இறுதிவாக்கில் நாகசாகி துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்ட கப்பல். படம்: கியோடோ/ராய்ட்டர்ஸ் -

தோக்­கியோ: ஜப்­பா­னின் தென்­மேற்­குத் துறை­மு­க­மான நாக­சா­கி­யில் நங்­கூ­ர­மிட்­டி­ருக்­கும் இத்­தா­லிய சொகு­சுக் கப்­ப­லில் கொரோனா கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்ட ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்கை 91க்கு உயர்ந்­து­விட்­ட­தாக அதி­கா­ரி­கள் நேற்று தெரி­வித்­த­னர். கோஸ்டா அட்லாண்டிகா எனப்படும் அந்­தக் கப்­ப­லில் 623 ஊழி­யர்­கள் உள்­ள­னர். அவர்­களில் ஒரு­வ­ருக்கு இவ்­வா­ரம் கிரு­மித்­தொற்று காணப்­பட்­டது. அத­னைத் தொடர்ந்து அனைத்து ஊழி­யர்­க­ளி­ட­மும் மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்­தப்­பட்டு வரு­கிறது.

இது­வரை 290 பேரி­டம் மேற்­கொள்­ளப்­பட்ட பரி­சோ­த­னை­க­ளைத் தொடர்ந்து பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 91ஐ எட்­டி­யது. கிரு­மித்­தொற்று இல்லை என உறு­தி­செய்­யப்­ப­டு­ப­வர்­கள் விரை­வில் கப்­ப­லில் இருந்து பத்திரமாக வெளி­யேற்­றப்­ப­டு­வார்­கள் என ஜப்­பா­னிய சுகா­தார அமைச்­சர் கட்­சு­னோபு காத்தோ கூறி­ய­தாக கியோடோ செய்தி நிறு­வ­னம் நேற்று தெரி­வித்­தது.