சிங்கபபூரில் இருந்து நாடு திரும்பும் மலேசியர்களுக்கு ஜோகூரில் புதிய நடைமுறை

ஜோகூர் பாரு: சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரிப்­ப­தைத் தொடர்ந்து இனி­மேல் அங்­கி­ருந்து மலே­சியா திரும்­பு­ப­வர்­க­ள் தங்களது வீட்டில் சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள அனு­ம­திக்­கப்­படமாட்­டார்­கள் என அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

சிங்­கப்­பூ­ரிலிருந்து நாடு திரும்­பும் மலே­சி­யர்­கள் தொடர்­பில் புதிய நடை­முறை வகுக்­கப்­பட்டு உள்­ள­தாக ஜோகூர் மாநில சுகா­தார, சுற்­றுச்­சூ­ழல் குழுத் தலை­வர் ஆர்.வித்­யா­னந்­தன் நேற்று ஓர் அறிக்­கை­யில் தெரி­வித்­தார்.

“சிங்­கப்­பூ­ரில் நடத்­தப்­படும் கொவிட்-19 பரி­சோ­த­னை­கள் இனி பொருந்­தாது. கிரு­மித்­தொற்று இல்லை என பரி­சோ­தனை மூலம் அறி­விக்­கப்­பட்­ட­வர்­கள் அவ­ர­வர் வீடு­களில் தனி­மைப்­ப­டுத்த மேற்­கொள்­ளப்­பட்டு வந்த நடை­முறை இனி கிடை­யாது.

“நாடு திரும்­பும் குடி­ம­க்கள், நிரந்­த­ர­வா­சி­கள், நீண்­ட­கால வருகை அனு­மதி அட்டை உள்­ளோர் அனை­வ­ரும் ஜோகூ­ருக்­குள் நுழைந்­த­தும் உடல்­வெப்­பப் பரி­சோ­த­னைக்­குச் செல்ல வேண்­டும்.

“காய்ச்­சல் கண்­டி­ரா­தோர், உடல்­ ந­லப் பிரச்­சினை தொடர்­பி­லான கண்கா­ணிப்பு மற்­றும் விசா­ர­ணைக்கு உட்­ப­டா­தோர் என அனை ­வ­ரும் மருத்­து­வப் பரி­சோ­த­னையை இங்கு மேற்­கொள்ள வேண்­டும்.

“மருத்­து­வப் பிரச்­சி­னை­கள் கண்­ட­றி­யப்­ப­டு­வோர் மருத்­து­வ­

ம­னைக்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­வர். பிரச்­சினை ஏதும் இல்­லா­தோர் மலே­சிய அர­சாங்­கத்­தால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட தனி­மைப்­ப­டுத்­தும் மையங்­ க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­வர்.

“இவர்­கள் தவிர, நாட்­டுக்­குள் நுழை­யும்­போதே காய்ச்­ச­லு­டன் வரு­வோர் நேராக மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­வர்,” என்று திரு வித்­யா­னந்­தன் தமது அறிக்­கை­யில் குறிப்­பிட்டுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!