பிறையைக் காண கூடிய சமயத் தலைவர்கள்

பிறையைக் காண கூடிய சமயத் தலைவர்கள்

1 mins read
3a0394c5-b28d-46f5-b205-25688850ae44
படம்: ஏஎஃப்பி -

ரமலான் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் பிறை நிலவைக் காண்பதற்காகச் சிறிய குழுவிலான முஸ்லிம் சமயத் தலைவர்களுக்கு தென்னாப்பிரிக்காவில் அனுமதியளிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து உள்ளூர் நேரப்படி 23ஆம் தேதி மாலை வேளையில் கேப்டவுன் நகரின் சீபாயிண்ட் என்ற பகுதியில் அவர்கள் கூடினர். இதற்கிடையே, பொருளாதார சிக்கல்கள் காரணமாக வரும் 1ஆம் தேதி முதல் சில வர்த்தகங்கள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று கூறியுள்ளார் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா. என்றாலும் பொது இடங்களில் கூடுவதற்கான தடை தொடர்ந்து நீடிக்கும் என்றும் எல்லைகள் மூடப்பட்டிருக்கும் என்றும் அவர் சொன்னார். படம்: ஏஎஃப்பி