நோய்ப்பரவலிலும் பிரிட்டனின் 'பிரெக்சிட்' விடாப்பிடி

நோய்ப்பரவலிலும் பிரிட்டனின் 'பிரெக்சிட்' விடாப்பிடி

1 mins read
9fa85da1-7a4b-4a0c-b17d-cca235dee382
-

கொரோனா உயிர்கொல்லி நோய்ப்பரவலை எதிர்கொள்ள உலகெங்கும் பல்வேறு நாடுகள் போராடி வரும் வேளையில் பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே உடன்பாடு எட்டுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படும் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆரம்பத்தில் வகுக்கப்பட்ட திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது. கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் தேறிவரும் பிரிட்டிஷ் பிரதமர் பாரிஸ் ஜான்சனி அதிகாரிகள், பேச்சுவார்த்தைகளை பிரிட்டன் நீட்டிக்கப்போவதில்லை என்று தெரிவித்ததார். ஐரோப்பியம் இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கான காலக்கேடு இவ்வாண்டு டிசம்பர் 31 தேதி என்றும் இதற்கு எந்த மாற்றமும் இல்லை என்று பிரிட்டனை பேச்சுவார்த்தைகளில் பிரதிநிதிக்கும் டேவிட் பிராஸ்ட் தெரிவித்தார்.

கொரோனா கிருமியால் உலக நாடுகளின் பொருளியல் மேலும் பாதிக்கப்படும் என்று அஞ்சப்படும் நேரத்தில் பிரிட்டனின் நிலைப்பாடு ஏற்புடையதா எனப் பொருளியல் நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.