ஜகார்த்தா: இந்தோனீசியாவில் மேலும் 396 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் அந்நாட்டில் மொத்தம் 8,607 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கிருமித்தொற்று காரணமாக இந்தோனீசியாவில் மேலும் 31 பேர் உயிரிந்துள்ளனர். இதன் விளைவாக இந்தோனீசியாவின் மரண எண்ணிக்கை 70ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கிருமித்தொற்றை எதிர்கொள்வதில் ஒத்துழைப்பது குறித்து இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் நேற்று முன்தினம் தொலைபேசி மூலம் கலந்துரையாடியதாக இந்தோனீசிய அதிபர் மாளிகை நேற்று தெரிவித்தது.
இந்தோனீசியாவிலும் அமெரிக்காவிலும் பாதுகாப்பு ஆடைகள், முகக்கவசங்கள் ஆகியவற்றுக்கான பற்றாக்குறை நிலவுகிறது.
இதற்குத் தீர்வு காண்பது குறித்து இருநாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடினர்.

