கிருமித்தொற்றால் பிரிட்டனில் மாண்ட மலேசிய மருத்துவர்

கிருமித்தொற்றால் பிரிட்டனில் மாண்ட மலேசிய மருத்துவர்

1 mins read

லண்டன்: பிரட்டனில் உள்ள பெர்மிங்ஹாம் மகளிர் மருத்துவமனையில் பணியாற்றிய மலேசிய மருத்துவ டாக்டர் ஆர்.விஷ்னா கொரோனா கிருமித்தொற்று காரணமாக உயிரிழந்தார். டாக்டர் விஷ்னா ஒரு சிறந்த மருத்துவர் என்றும் அவரது மரணம் ஒரு பேரிழப்பு என்றும் அவர் பணியாற்றிய மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் ஃபியோனா ரெனோல்ஸ் தெரிவித்தார். டாக்டர் விஷ்னாவுக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.