அவசரநிலையை நீட்டிப்பது குறித்து ஜப்பான் யோசனை

அவசரநிலையை நீட்டிப்பது குறித்து ஜப்பான் யோசனை

2 mins read
64ba6624-7561-4d05-bad4-04a011e1f9fc
தோக்கியோ நகரில் பயணிகளின் நடமாட்டம் இல்லாத ஜின்ஸா சுரங்க ரயில்நிலையம். படம்: ஏஎஃப்பி -

தோக்­கியோ: கிரு­மித்­தொற்றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த நடப்­பில் இருக்­கும் அவ­சரநிலையை நீட்­டிப்­ப­தற்கான அவ­சி­யம் குறித்து ஜப்­பா­னிய அர­சாங்­கம் பரி­சீ­லித்து வரு­வ­தாக சில தக­வல்­களை மேற்­கோள் காட்டி புளூம்­பெர்க் செய்தி நிறு­வ­னம் கூறி­யுள்­ளது.

சமூ­கத்­தி­னி­டையே கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­க­ளைக் குறைக்­கும் நோக்­கில் அமல்­ப­டுத்­தப்­பட்ட அவ­ச­ர­நிலை மூன்று வாரத்தை எட்­டி­யுள்­ளது.

மே 6ஆம் தேதி வரை அவ­ச­ர­நிலை நடப்­பில் இருக்­கும் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் தற்­போ­தைய கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் முன்­னேற்­றத்­திற்­கான அறி­கு­றியை வெளிப்­ப­டுத்­தா­த­தால் மே 6க்குப் பிற­கும் அவ­ச­ர­நி­லையை நீடிக்க வேண்­டிய அவ­சி­யம் ஏற்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் தேசிய ஒலி­ப­ரப்பு நிறு­வ­ன­மான என்­எச்கே தெரி­வித்­தது. ஆனால் அதற்கு ஆதா­ர­மாக எந்­த­வொரு தக­வ­லை­யும் அது குறிப்­பி­ட­வில்லை.

தலை­ந­கர் தோக்­கி­யோ­வி­லும் ஒசாக்கா நக­ரி­லும் அன்­றா­டம் பதி­வா­கும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை குறை­யத் தொடங்­கி­னா­லும் எதிர்­பார்த்த அள­வுக்கு அந்த வீழ்ச்சி இல்லை என்று நிபு­ணர்­கள் கரு­து­வ­தாக என்­எச்கே கூறி­யது.

எடுத்த எடுப்­பில் அவ­ச­ர­நிலையை தீவி­ரப்­ப­டுத்த விரும்­பாத ஜப்­பா­னிய பிர­த­மர் ஷின்ஸோ அபே, ஏப்­ரல் 8ஆம் தேதி ஏழு வட்­டா­ரங்­ க­ளுக்கு மட்­டும் அதனை அமல்­படுத்த உத்­த­ர­விட்­டார். பின்­னர் நாடு­மு­ழுவதும் அது விரி­வு­ப­டுத்­தப்­பட்­டது.

பல பகு­தி­களில் கிரு­மிப் பர­வல் குறைந்து வந்­த­போ­தி­லும் தோக்­கி­யோ­வில் ஒவ்­வொரு நாளும் பதி­வா­கும் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை நூறுக்­குக் குறை­யா­மல் உள்­ளது. கடந்த இரு வாரங்­க­ளாக அந்­ந­க­ரில் இதே நிலைமை நீடிக்­கிறது.

சனிக்­கி­ழமை அங்கு 103 சம்­ப­வங்­கள் பதி­வா­ன­தைத் தொடர்ந்து தோக்­கியோ முழு­வ­தும் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 3,836 ஆக உயர்ந்­தது. ஜப்­பா­னில் வேறெங்­கும் இல்­லாத அள­வுக்கு தோக்­கி­யோ­வில்­தான் அதி­கம் பேர் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர்.

தோக்­கி­யோ­வில் மாண்­டோர் எண்­ணிக்­கை­ நூறைத் தொட்­டு­விட்­டது.

இப்­ப­டிப்­பட்ட நிலை­யில் அவ­ச­ர­நி­லையை நீட்­டிப்­பது தவிர்க்க முடி­யாத ஒன்று என்று அதி­கா­ரி­கள் கரு­து­வ­தாக ஜிஜி செய்தி நிறு­வ­னம் கூறி­யுள்­ளது.

இருப்­பி­னும் அந்த நீட்­டிப்பு எது­வரை இருக்­கும் என்­பது குறித்து பல்­வேறு ஊகங்­கள் நில­வு­வ­தா­க­வும் அது குறிப்­பிட்­டது.

மே 6ஆம் தேதிக்­குப் பிறகு மேலும் ஒரு வாரத்­திற்கு அவ­ச­ர­நிலை நீட்­டிக்­கப்­ப­ட­லாம் என்று ஒரு­சா­ரா­ரும் மே மாதம் முழு­வ­துக்­கும் அது நீடிக்­கக்­கூ­டும் என்று வேறு சில அதி­கா­ரி­களும் கூறு­வ­தாக ஜிஜி செய்தி தெரி­வித்­தது.

இதற்­கி­டை­யில், தமது அமைச்­சில் அலு­வ­லர் ஒரு­வ­ருக்­குக் கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தைத் தொடர்ந்து முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக தாம் இல்­லத்­த­னி­மை­யில் இருப்­ப­தாக ஜப்­பா­னிய பொரு­ளி­யல் அமைச்­சர் யாசு­டோஷி நிஷி­முரா நேற்று முன்­தி­னம் கூறி­னார்.