நியூயார்க் மருந்துக் கடைகளில் கிருமித் தொற்று பரிசோதனை

நியூயார்க் மருந்துக் கடைகளில் கிருமித் தொற்று பரிசோதனை

2 mins read
4d8c044c-1c25-4c46-b426-4694a58124f0
கொரோனா கிருமிப் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் கடற்கரைகள் மூடப்படவில்லை. நேற்று முன்தினம் நியூபோர்ட் கடற்கரைக்கு வந்த கலிபோர்னியாவின் ஆரஞ்சு வட்டார மக்கள் காலாற நடந்து குளித்து, வெயிலில் காய்ந்து பொழுதைப் போக்கினர். படம்: ஏஎஃப்பி -

நியூ­யார்க்: அமெ­ரிக்­கா­வில் நோய்ப் பர­வலின் மைய­மாக விளங்­கும் நியூ­யார்க் நக­ர மருந்­துக் கடை­களில் கொரோனா கிரு­மித் தொற்று சோதனை நடத்த அனு­ம­திக்­கப்­ப­ட­வி­ருக்­கிறது.

நியூ­யார்க் மாநில ஆளு­நர் இதனை தெரி­வித்­தார்.

ஒவ்­வொரு நாளும் 40,000 பேருக்கு கிரு­மித் தொற்று சோதனை நடத்­து­வது இலக்கு. இதற்­காக 5,000 மருந்­துக் கடை­களில் பரி­சோ­தனை நடத்த அனு­ம­திக்­கப்­படும் என்று ஆளு­நர் ஆண்ட்ரு குவோமோ கூறி­னார்.

அமெ­ரிக்கா முழு­வ­தும் 938,000 பேர் கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். சுமார் 53,751 பேர் கிரு­மிக்கு பலி­யா­கி­விட்­ட­னர். இறந்­த­வர்­களில் மூன்­றில் ஒரு பங்கினர் நியூ­யார்க்கைச் சேர்ந்­த­வர்­கள்.

இந்த நிலை­யில் கொரோனா கிருமி நில­வ­ரத்தை விளக்­கும் அன்­றாட செய்­தி­யா­ளர் கூட்­டத்துக்கு அதி­பர் டிரம்ப் வரவில்லை.

பின்­னர் வெளி­யிட்ட டுவிட்­டர் பதி­வில் ஊட­கங்­கள் தேவை­யற்ற கேள்­வி­களை கேட்­ப­தாக அவர் சாடி­னார்.

கடந்த வியா­ழக்­கி­ழமை வெள்ளை மாளி­கை­யில் நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் கொரோனா கிருமி நோயை குணப்­ப­டுத்த கிருமி நாசி­னி­யைப் பயன்­ப­டுத்­த­லாம் என்று அதி­பர் டிரம்ப் யோசனை கூறி­யி­ருந்­த­தால் பெரும் சர்ச்சை வெடித்தது.

ஊட­கங்­கள் அவரை கடு­மை­யாக விமர்­சித்­தன. திரு டிரம்­பின் யோச­னைக்கு கண்­ட­னம் தெரி­வித்த மருத்­து­வர்­களும் மருந்து தயா­ரிக்­கும் நிறு­வ­னங்­களும், கிருமி நாசினி விஷத்­தன்மை உள்ளதால் கிரு­மி­யைக் கொல்­வ­தற்கு முன்பாகவே ஆளை கொன்­று­வி­டும் என்று எச்­ச­ரித்­தி­ருந்­தன.

நியூ­யார்க்கில் கடந்த 18 மணி நேரத்­தில் வீட்­டில் பயன்­ப­டுத்­தப்­படும் ரசா­ய­னத் திர­வங்­களை குடித்­து­விட்­ட­தாக உதவி கேட்டு 30 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.

இது, கடந்த ஆண்டு இதே காலக்­கட்­டத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் 13 சம்­ப­வங்­கள் அதி­கம்.

இதற்­கும் அதி­பர் டிரம்ப் தெரி­வித்த யோச­னைக்­கும் நேரடித் தொடர்பு இருக்­கி­றதா என்­பது தெரி­ய­வில்லை.

இதற்­கி­டையே அமெ­ரிக்­கா­வின் நான்கு மாநி­லங்­களில் உள்ள சிறை­களில் ஏறக்­கு­றைய 3,300 பேருக்கு கிரு­மித் தொற்­று இருப்பது உறுதி செய்­யப்­பட்டு உள்­ளது.

இவர்­களில் 96 விழுக்­காட்­டி­ன­ருக்கு கிருமி தொற்­றி­ய­தற்­கான அறி­கு­றியே இல்லை.

ஓஹையோ சிறை­யில் முதல் கிரு­மித் தொற்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­போது அதன் இயக்­கு­நர், கண்­ணுக்­குத் தெரி­யாத பேயை எதிர்த்துப் போராட வேண்­டி­யி­ருக்­கி­றது என்று கூறினார்.

"எங்­கி­ருந்து கிருமி தொற்­று­கிறது என்­ப­தைக் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை," என்று ஓஹையோ மாநில மறு­வாழ்வு பிரி­வின் இயக்­கு­ந­ரான ஆன்­னட் சாம்­பர்ஸ் ஸ்மித் குறிப்­பிட்­டார்.

ஓஹை­யோ­வில் உள்ள மரி­யோன் சீர்­தி­ருத்த நிலை­யத்­தில் 2,500 கைதி­கள் வசிக்­கின்­ற­னர். பெரும்­பா­லோர் முதியவர்­கள். ஏற்­கெ­னவே பல­ருக்கு சுகா­தா­ரப் பிரச்­சி­னை­கள் இருக்­கின்­றன.

இந்த நிலை­யில் முதல் கிரு­மித் தொற்று சம்­ப­வம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இதையடுத்து 2,300 பேருக்­கும் கிருமி சோதனை நடை­பெற்­றது. இதில் 2,028 பேருக்கு கிரு­மித் தொற்று இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. 98 விழுக்­காட்­டி­ன­ருக்கு அறி­கு­றியே இல்­லா­தது அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தி உள்­ளது.