ஸ்பெயினில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படுகிறது

மேட்­ரிட்: ஸ்பெ­யி­னில் கொரோனா கிரு­மிப் பர­வ­லுக்கு எதி­ராக மார்ச் மாதம் மத்­தி­யில் ஊர­டங்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­தால் மக்­கள் வீட்­டி­லேயே முடங்­கிக் கிடந்­த­னர்.

இந்த நிலை­யில் ஊர­டங்கு நிபந்­த­னை­களில் சில­வற்றை அந்­நாட்­டின் அர­சாங்­கம் தளர்த்­தி­யுள்­ளது.

குறிப்­பாக 14 வய­துக்கு உட்­பட்ட குழந்­தை­க­ளுக்­கான கட்­டுப்­பா­டு­கள் முதல் முறை­யாக நேற்று தளர்த்­தப்­பட்­டன.

நாட்­டில் உள்ள பதி­னான்கு வய­துக்கு உட்­பட்ட 6.3 மில்­லி­யன் குழந்­தை­கள் நாள்­தோ­றும் காலை 9 மணி­யி­லி­ருந்து இரவு 9.00 மணிக்­குள் ஒரு மணி நேரம் வெளியே செல்­ல­லாம் என்று அர­சாங்­கம் அறி­வித்­துள்­ளது.

ஆனால் ஒரு கிலோ மீட்­டர் சுற்று வட்­டா­ரத்­துக்கு மேல் செல்­லக்­கூ­டாது என்­று நிபந்­தனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. சைக்­கிள் ஓட்­ட­லாம், சாலை­களில் சறுக்­குப் பல­கை­களில் ஏறி செல்­லலாம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதனால் வீட்­டில் பொழு­தைக் கழிக்க முடி­யா­மல் வீடியோ விளை­யாட்­டு­க­ளை­யும் கைபேசி செய­லி­க­ளி­லும் விளை­யாடி வெறுத்­துப் போயி­ருக்­கும் ஆயி­ரக்­க­ணக்­கான சிறு­வர்­களுக்கு புதிய தெம்பு ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் ஓரளவு நேற்று தளர்த்தப்பட்டதும் வெளியே சிறார்கள் சுதந்­திரக் காற்றை சுவா­சித்து மகிழ்ந்­த­னர்.

வரும் மே மாதம் மேலும் கட்­டுப்­பா­டு­களை தளர்த்­து­வது குறித்து அர­சாங்­கம் ஆலோ­சனை நடத்தி வரு­கிறது.

குழந்­தை­க­ளுக்கு கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டுள்­ளதை மனோ­வி­யல் நிபு­ணர்­கள் வர­வேற்­றுள்­ள­னர்.

ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேர மாவது வெளியே செல்ல அனுமதிப்பது நொந்து போயிருக்கும் சிறுவர்களுக்கு பெரும் மனமாற்றத்தைத் தரும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

“இருட்டில் இருப்பதைவிட்டு சூரிய வெளிச்சத்தில் நடமாடுவது மிகவும் முக்கியம்,” என்று மேட்ரிட் நகர மனோவியல் நிபுணரான லாரா பினேரோ தெரிவித்தார்.

“நாற்பது சதுர மீட்டர் வீட்டில் வசிக்கும் மக்களும் உள்ளனர். அவர்களுக்கு போதுமான காற்றோட்டமும் வெளிச்சமும் இருக்காது. இப்படி வரம்புக்கு உட்பட்ட இடத்தில் வசிக்கும் மக்கள் வெளியே சூரிய வெளிச்சத்தைப் பார்த்தாலே புத்துணர்வு ஏற்படும்,” என்று அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!