இத்தாலியில் மே 4 முதல் தளர்வு

ரோம்: கிட்­ட­தட்ட ஒன்­றரை மாத­மாக முடக்­கப்­பட்­டுள்ள இத்­தா­லி­யில் மே நான்­காம் தேதி முதல் படிப்­ப­டி­யாக கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­படும் என்று அதன் பிர­த­மர் ஜிசுப்பே கோன்டே அறி­வித்­துள்­ளார்.

ஐரோப்­பிய நாடு­களில் கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு ஆக அதி­கமானோரைப் பலி கொடுத்த இத்­தா­லி­யில், கடந்த சில வாரங்­க­ளாக மாண்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை குறைந்து வரும் நிலை­யில், கோன்டே இம்­மு­டிவை எடுத்­துள்­ளார்.

மார்ச் 14ஆம் தேதிக்­குப் பிறகு, நேற்று முன்­தி­னம் ஆகக் குறை­வாக 260 பேர் மாண்­ட­னர்.

இந்­நி­லை­யில் மே நான்­காம் தேதி முதல் பொதுமக்­க­ளுக்கு பூங்­காக்­கள் திறந்து விடப்­ப­ட­வுள்­ளன. தொழிற்­சா­லை­கள், கட்­டுமான பணி­கள் மீண்­டும் தொடங்­க­வுள்­ளன.

மக்­கள் தங்­கள் வட்­டா­ரத்­திற்­குள்­ளேயே நட­மாட அனு­ம­திக்­கப்­

ப­டு­வர். உண­வ­கங்­கள், மது­பா­னக்­கூ­டங்­களில் இருந்து வீட்­டிற்கு உணவு, பானங்கள் வாங்­கிச் செல்­லாம்.

வரும் மே 19ஆம் தேதி முதல் அருங்­காட்­சி­யகம், நூல­கங்­கள் செயல்­படும். ஜூன் 1ஆம் தேதி முதல் உண­வ­கங்­களில் அமர்ந்து சாப்­பிட அனு­ம­தி­ய­ளிக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஆனால் பள்­ளி­க­ளுக்கு செப்­டம்­பர் மாதம் வரை விடு­முறை அளிக்­கப்­பட்­டுள்­ளது.

இத்­தா­லி­யில் இது­வரை 197,675 பேருக்­குக் கிரு­மி ­தொற்­றி­யுள்­ளது. 26,644 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

இதற்­கி­டையே, பிரான்ஸ், ஸ்பெ­யின், சுவிட்­சர்­லாந்து ஆகிய நாடு­களும் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­து­வது குறித்து ஆலோ­சனை நடத்தி வரு­கின்­றன.

ஸ்பெ­யி­னில் நேற்று முன்­தி­னம் குழந்­தை­க­ளுக்­கான கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­தைத் தொடர்ந்து வரும் 2ஆம் தேதி முதல் வெளிப்­புற உடற்­ப­யிற்­சிக்கு அனு­ம­தி­ய­ளிக்­கப்­ப­டக்­கூ­டும்.

ஜெர்மனியில் ஏற்கெனவே இயல்பு நிலை ஓரளவு திரும்பியுள்ள நிலையில், பிரான்ஸ் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­து­வ­தற்­கான திட்­டத்தை இன்று அறி­விக்­கும்.

சுவிட்­சர்­லாந்­தில் ஏற்­கெ­னவே சில வர்த்­தக நிறு­வ­னங்­கள் மட்­டும் செயல்­ப­டு­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், வரும் 11ஆம் தேதி முதல் அனைத்து சில்­லறை வர்த்­த­கங்க­ளும் செயல்­ப­டத் தொடங்­கும். மேலும் அங்குத் தொடக்­கப்­ பள்­ளி­களும் திறக்­கப்­ப­ட­வுள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!