ஆக்லாந்து: கொரோனா கிருமித்தொற்றின் சமூக பரவலை வெற்றிகரமாகக் தடுத்துள்ளதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக அங்குக் கிருமித்தொற்றால் பாதிக்கப்
படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்த நிலையில், ஞாயிறன்று ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தற்போதைக்கு கிருமிப் பரவல் தடுக்கப்பட்டு விட்டதாகக் கூறினார்.
நாம் இப்படியே தொடர வேண்டுமானால், தொடர்ந்து விழிப்புடன் இருக்கவேண்டியது மிகவும் அவசியம் என்றும் அவர் சொன்னார்.
ஆனால் இதற்குக் கிருமித்தொற்று முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தமல்ல என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பெரும்பாலான மக்கள் எல்லா நேரங்களிலும் வீட்டிலேயே இருக்க வேண்டும் மற்றும் அனைத்து சமூக தொடர்புகளையும் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நியூசிலாந்தில் இன்று முதல், சில அத்தியாவசியமற்ற வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் சுகாதார, கல்வி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கவுள்ளன.

