பெட்டாலிங் ஜெயா: ஈரச்சந்தை மீன்கடைக்காரருக்குத் தொற்று

பெட்டாலிங் ஜெயா: ஈரச்சந்தை மீன்கடைக்காரருக்குத் தொற்று

1 mins read
6c47bf5c-c796-4350-8917-b5ab4379a554
மலேசியாவின் தீயணைப்புப் படை வீரர்கள் கொவிட்-19 பரவலைத் தடுக்க கிருமி நாசினி மருந்தை தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ் -

பெட்டாலிங் ஜெயா: பெட்டாலிங் ஜெயா, ஓல்ட் டவுன் ஈரச் சந்தையில் மீன்கடை வைத்திருக்கும் 51 வயது ஆடவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை

அடுத்து, கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்துவதற்காக அச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மீன் பிரிவின் மற்ற 21 வர்த்தகர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் பரிசோதனைக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மலேசியா: 67% குணமடைந்தனர்

புத்ராஜெயா: மலேசியாவில் நேற்று மேலும் 95 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,957ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை தொற்று கண்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 67.9 விழுக்காடாகும்.

நேற்று மேலும் 40 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப் பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5820ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 99 பேர் பலியாகினர்.

கட்டுப்பாட்டு உத்தரவை மீறிய துணை சுகாதார அமைச்சர்

ஈப்போ: மலேசியாவில் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு நடப்பில் இருக்கும்போது, துணை சுகாதார அமைச்சர் நூரி அஸ்மி கஜாலி, பேராக் மாநில நிர்வாக அதிகாரி ஆகிய இருவரும் கிட்டதட்ட 30 பேருடன் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட புகைப்படம் வெளியானதைர் தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும் இன்று ஜெரிக் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்படவுள்ளது.