ஜோகூரில் 7,000 பேர் தனிமைப்படுத்தல்

ஜோகூரில் 7,000 பேர் தனிமைப்படுத்தல்

1 mins read
de75a931-732f-4e04-a22e-e677bfe4e3df
திங்கட்கிழமை முதல் ஒவ்வோர் நாளும் 400 மலேசியர்கள் ஜோகூருக்கு அனுமதிக்கப்படுகின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஜோகூர் முழுவதுமுள்ள 57 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 7,145 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூரில் இருந்து திரும்பிய மலேசியர்கள் என்று ஜோகூர் சுகாதார மற்றும் சுற்றுப்புற குழுத் தலைவர் வித்யாநந்தன் கூறினார்.

"திங்கட்கிழமை முதல் ஒவ்வோர் நாளும் 400 மலேசியர்களை அனுமதிக்கத் தொடங்கினோம்,"

"பாதுகாப்பு காரணங்களுக்காக ஜோகூருக்குத் திரும்ப விரும்புபவர்களின் எண்ணிக்கையை நாங்கள் குறைக்க விரும்புகிறோம்.

"எங்கள் சுகாதார அமைப்பை நாங்கள் திணறடிக்க விரும்பவில்லை, முன்பு ஒருநாளுக்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மலேசிய திரும்பினர்," என்று தி ஸ்டார் செய்தியிடம் அவர் சொன்னார்.

மாநிலம் முழுவதும் 110 தனிமைப்படுத்தல் மையங்கள் உள்ளதால், நாடு திரும்புபவர்களைத் தனிமைப்படுத்த போதுமான வசதிகள் இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

இதற்கிடையே மலேசியாவில் கிருமித்தொற்றால் இன்று ஒருவர் பலியானதையடுத்து, மாண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 100ஐ எட்டியது.

இன்று புதிதாக 31 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தமாக 5,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4,032 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்