ஜோகூரில் 7,000 பேர் தனிமைப்படுத்தல்

ஜோகூரில் 7,000 பேர் தனிமைப்படுத்தல்

1 mins read
e2beecdf-f26e-4810-b4fa-04af3b441588
ஜோகூர் முழு­வ­து­முள்ள 57 தனி­மைப்­ப­டுத்­தல் மையங்­களில் சுமார் 7,145 பேர் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர். அவர்­களில் பெரும்­பா­லா­னோர் சிங்­கப்­பூ­ரில் இருந்து திரும்­பிய மலே­சி­யர்­கள் என்று ஜோகூர் சுகா­தார மற்­றும் சுற்­றுப்­புற குழுத் தலை­வர் வித்­யா­நந்­தன் கூறி­னார். படம்: பெர்னாமா -

ஜோகூர் பாரு: ஜோகூர் முழு­வ­து­முள்ள 57 தனி­மைப்­ப­டுத்­தல் மையங்­களில் சுமார் 7,145 பேர் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

அவர்­களில் பெரும்­பா­லா­னோர் சிங்­கப்­பூ­ரில் இருந்து திரும்­பிய மலே­சி­யர்­கள் என்று ஜோகூர் சுகா­தார மற்­றும் சுற்­றுப்­புற குழுத் தலை­வர் வித்­யா­நந்­தன் கூறி­னார்.

"திங்­கட்­கி­ழமை முதல் ஒவ்­வோர் நாளும் 400 மலே­சி­யர்­களை அனு­ம­திக்­கத் தொடங்­கி­னோம்,"

"பாது­காப்பு கார­ணங்­க­ளுக்­காக ஜோகூ­ருக்­குத் திரும்ப விரும்­பு­ப­வர்­க­ளின் எண்­ணிக்­கையை நாங்­கள் குறைக்க விரும்­பு­கி­றோம்.

"எங்­கள் சுகா­தார அமைப்பை நாங்­கள் திண­ற­டிக்க விரும்­ப­வில்லை, முன்பு ஒரு­நா­ளுக்கு சுமார் ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்­ட­வர்­கள் மலே­சியா திரும்­பி­னர்," என்று தி ஸ்டார் செய்­தி­யி­டம் அவர் சொன்­னார்.

மாநி­லம் முழு­வ­தும் 110 தனி­மைப்­ப­டுத்­தல் மையங்­கள் உள்­ள­தால், நாடு திரும்­பு­ப­வர்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்த போது­மான வச­தி­கள் இருப்­ப­தா­க­வும் அவர் உறு­தி­ய­ளித்­தார்.

இதற்­கி­டையே மலே­சி­யா­வில் கிரு­மித்­தொற்­றால் நேற்று ஒரு­வர் பலி­யா­ன­தை­ய­டுத்து, மாண்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 100ஐ எட்­டி­யது.

நேற்று புதி­தாக 31 பேருக்­குக் கிரு­மித்தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து, மொத்­த­மாக 5,851 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். 4,032 பேர் குண­ம­டைந்து வீடு திரும்­பி­யுள்­ள­னர்.