மலேசிய சுகாதார துணையமைச்சருக்கு அபராதம்

மலேசிய சுகாதார துணையமைச்சருக்கு அபராதம்

1 mins read
f9824839-374d-4a5e-80d5-035a69aec062
குற்றத்தை ஒப்புக்கொண்ட சுகாதார துணையமைச்சர் நூர் அஸ்மி கஜாலி (வலது), பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் ரஜ்மான் ஜகாரியா ஆகிய இருவரும் 1,000 ரிங்கிட் அபராதம் செலுத்தினர். படம்: பெர்னாமா -

கிரிக்: பேராக்கில் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதாக சுகாதார துணையமைச்சர் நூர் அஸ்மி கஜாலி மற்றும் பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் ரஜ்மான் ஜகாரியா ஆகியோர் மீது நேற்று காலை, கிரிக் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இவ்விருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு தலா 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. ஏப்ரல் 17ஆம் தேதி சமயப் பள்ளி ஒன்றுக்குச் சென்ற இவர்கள், சுமார்

30 பேருடன் உணவருந்திய புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிருமித்தொற்று பரிசோதனை

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள ஒருநாள் நாடாளுமன்ற கூட்டத்திற்கு முன்னர், அனைத்து உறுப்பினர்களும் கிருமித்தொற்றுக்கான பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

"நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நடப்பில் இருப்பதால், அனைத்து உறுப்பினர்களும் மே 14 முதல் 15 வரை நாடாளுமன்றத்தில் கிருமித்தொற்றுக்கான பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்," என்று உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் செயலாளர் ரிதுவான் ரஹ்மத் குறிப்பிட்டுள்ளார்.